
அ முதல் ஃ வரை எதிலும் கலப்படம். லாபம் மட்டுமே கருதும் மக்கட்பதர்கள், மனிதநேயமே இல்லாத விலங்குகளைப் போன்றோர் செய்யும் கொடுமை இது. உணவில், மருந்துகளில், சாராயத்தில் என அனைத்திலும் நீக்கமற செய்யப்படுவது கலப்படம். அண்மையில் காய்ச்சலுக்குத் தரப்படும் பாராசிடாமல் மருந்தில் கலப்படம் செய்யப்பட்டதால் பலர் உயிருக்குப் போராடும் அளவில் ஒவ்வாமை ஏற்பட்டது. ஊசி மருந்துகளில் கலப்படத்தால் சிலர் உயிரை இழந்தனர்.
சாராயக் கலப்படத்தால் கண் பார்வையை இழக்கின்றனர் என்று அரசு மிக்க ஆதங்கத்தோடு நல்ல சாராயத்தை விற்பனை செய்து வருகிறது. அதிலும் கலப்படம் செய்தே விற்பனை செய்கிறார்கள். போதை ஏற வேண்டும் என்பதற்காக நச்சுப் பொருட்களைச் சேர்த்து குடிக்கிறார்கள்.
மருந்துகளிலும், உணவுப் பண்டங்களிலும் கலப்படம் செய்பவர்களுக்கு கடுமையான தண்டணையைத் தராமல் விட்டு விடுவதால் அவர்கள் மீண்டும் மீண்டும் அத்தொழிலில் ஈடுபடுகின்றனர்.
கலப்படப் பொருட்கள் மெல்ல மெல்ல உடலின் முக்கிய உறுப்புகளைத் தாக்குகிறது. முக்கியமாக கல்லீரலும், சிறுநீரகங்களும் பாதிப்புக்குள்ளாகின்றன. மருந்துகளின் தரம் குறைந்து இருப்பதால் பல நோய்களுக்கு கொண்டாட்டமாகி விடுகிறது. அளவும், வீரியமும், தரமும் உள்ள மருந்துகளை விற்பனை செய்ய வேண்டும்.
கலப்படம் செய்பவர்களை மக்கள் விரோதிகள், சமூகத் தீவிரவாதிகளாக கருதி தண்டனை கொடுக்க வேண்டும்.
அன்புடன்
ஜி.ராஜமோகன்

