

– டாக்டர் எஸ்.வெங்கடாசலம்
பசி, தாகம், சுவாசம், பாலுணர்வு போன்றவை மனிதனின் அடிப்படை இயல்பூக்கங்கள். இவை மனிதர்களிடம் மட்டுமின்றி விலங்குகளிடமும் காணப்படுகின்றன. பசி உணர்வு தற்காப்புக்கும் பாலுணர்வு தன் இனப்பாதுகாப்புக்கும் அமைந்துள்ளன. செக்ஸ் என்பது வெறும் இனப்பெருக்கத்திற்குரிய செயல்பாடு மட்டுமே எனும் கருத்து பழமையாகிவிட்டது. இது அன்றாட வாழ்க்கைத் தேவைகளுள் ஒன்றாக இன்றைய உலகில் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது.
பாலுறவுச் செயலில் சில நிலைகள் உண்டு.
1.பாலுணர்வு விருப்பம். இது மனதில் முகிழ்ப்பது.
2.எழுச்சி அல்லது கிளர்ச்சி நிலை. இப்போது ஆண் உறுப்பு நிமிரும், விறைக்கும்; பெண் உறுப்பில் ஒருவித திரவம் சுரக்கத் துவங்கும்.
3.உடலுறவு செயல்பாடு.
4.உச்சகட்ட நிலை.
ஆண்&பெண் இருவரிடமும் உச்சகட்ட கிளர்ச்சி ஏற்படும். ஆணுக்கு விந்து வெளிப்படும். இந்த நிலைகளில் எந்த ஒன்றில் தடையோ, பிரச்னையோ ஏற்பட்டாலும் பாலுணர்வுக் குறைபாடுகள் ஏற்படும்.
பாலியல் குறைபாடு உள்ளவர்கள், தம்பதியரிடையே திருப்தி தர முடியாதவர்கள் உளவியல் நிபுணர்களிடம் ஆலோசனையும், சிகிச்சையும் பெறுவது மேல்நாடுகளில் சாதாரணமாகிவிட்டது. நம் நாட்டில் மணமானவர்கள், ஆகாதவர்கள் தமது பாலுணர்வுக் குறைபாடுகளால் துன்பப்படுவோர் அதிகம். ஹோமியோபதி மருத்துவத்தில் செக்ஸ் குறைபாடு உள்ள ஆண், பெண் யாராக இருந்தாலும் முழுமையான பகுப்பாய்வு செய்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதில் பக்கவிளைவு இல்லாமல் வெற்றி கிடைக்கிறது.

ஹோமியோபதியில் உள்ள மிக முக்கியமான செக்ஸ் டானிக்காக ‘டாமியானா’ எனும் மருந்து பயன்படுத்தப்படுகிறது. தென்அமெரிக்காவில் வளரக் கூடிய ஒருவகைத் தாவரம் இது. இதன் காய்ந்த இலைகள், தண்டுகளை மருந்தாக்கி நீண்டகாலமாக மக்கள் பயன்படுத்தி வந்துள்ளனர். மனச்சோர்வை அகற்றவும், கிருமி நாசினியாகவும், நீரை பிரிக்கவும், பெரும்பாலும் செக்ஸ் சக்தி அதிகரிக்கவும் இதனைக் காலம்காலமாக உபயோகித்துள்ளனர்.
அர்ஜெண்டினாவின் பியூனஸ் ஏய்ர்ஸ் பல்கலைக்கழகத்தை சார்ந்து மருந்தியல், உயிர் வேதியியல் துறை விஞ்ஞானிகள் பலவித மூலிகைகளின் மருந்தாற்றல் குறித்து ஆராய்ச்சிகள் மேற்கொண்டனர். ‘டாமியானா’வின் பாலுணர்வுத் தூண்டல் ஆற்றலைக் கண்டறிந்து வியந்தனர். ஆணுறுப்பிலுள்ள தமனிகளை தளர்த்தி விரிவடையச் செய்து அதிக ரத்தம் உட்பாயச் செய்வதன் மூலம் ஆண்மை எழுச்சி இயற்கையாக நிகழ டாமியானா உதவுவதை அவர்களின் ஆராய்ச்சி உறுதிப்படுத்தியது. இத்தாலியில் நடைபெற்ற மற்றொரு ஆராய்ச்சியிலும் இது ஊர்ஜிதமானது.
ஹவாய் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் குழு, 21 வயது கடந்த 77 பெண்களிடம் (பாலியல் செயல் ஆற்றலை அதிகரிக்க விரும்பிய பெண்களிடம்) டாமியானா கொடுத்து ஆய்வுகள் மேற்கொண்டனர். ‘அர்ஜின்மேக்ஸ்’ என்பது பெண்களுக்கான ஓர் உணவுத் தயாரிப்பு. இதில் பாலுறுப்புகளில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யக்கூடிய டாமியானா, ஜின்செங் மற்றும் சில மூலிகைகள் கலந்துள்ளன. இதனை 43 பேர்களுக்கும், மீதிப் பெண்களுக்கு மருந்தில்லாத சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது.
4 வாரங்கள் கழித்து பரிசோதனை செய்து பார்த்தபோது மருந்தில்லா சிகிச்சையளிக்கப்பட்ட பெண்களிடம் குறைபாடுகள் நீடித்தன. உணவின் மூலம் மருந்தளிக்கப்பட்ட பெண்களின் பாலியல் வாழ்க்கையில் ஒட்டுமொத்த முன்னேற்றம் இருப்பதை அவர்கள் மகிழ்ச்சியோடு தெரிவித்தனர்.
டென்மார்க்கில் நடைபெற்ற ஓர் ஆய்வு முடிவின்படி டாமியானா, ஜீரணசக்தியை ஒழுங்குபடுத்துவதற்கும், உடல் எடை குறைப்பதற்கும் உதவுகிறது என்பது தெரிய வந்துள்ளது. மேலும் பெண்கள் டாமியானா உட்கொள்வதால் பெண்மை ஹார்மோன் ஈஸ்ட்ரோஜனை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை என்றும் ஹார்மோன் இயக்கத்தை சீரமைத்து மாதவிடாய் கோளாறுகளையும் தீர்க்கிறது என்றும் ஆய்வுகள் உறுதி செய்துள்ளன.
அமெரிக்காவில் இருதய நோயைக் குணப்படுத்துவதற்காக ‘வயாக்ரா’ மாத்திரை முதலில் ஆராய்ச்சி செய்யப்பட்டது. அது 5 சதவீதம் பேருக்கே பலனளித்ததாகவும், ஆனால், 9.5 சதவீதம் பேருக்கு செக்ஸ் வேட்கை அதிகம் ஏற்பட்டதாகவும் கூறி இம்மாத்திரை குறித்த ஆராய்ச்சி திசை மாறியது. இன்று பல அமெரிக்க மருந்து கம்பெனிகள் மூலம் உலகின் பல நாடுகளுக்கு வயாக்ரா அனுப்பப்பட்டு வணிகம் நடைபெறுகிறது. ‘சில்டெனாஃபில் ஸிட்ரேட்’ என்பது இம்மருந்தின் பெயர். வர்த்தகப் பெயர் வயாக்ரா. இதன் கெடுதிகள் ஆபத்துகளைப் பொருட்படுத்தாமல் ஆண்மை குறைந்த கோடிக்கணக்கான அமெரிக்கர்கம், காமபித்தர்களும், சாதரரண ஜனங்களும் கூட வயாக்ரா மீது ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இம்மாத்திரை மூலம் ஆணுக்கு ஏற்படும் விறைப்பு (மாத்திரையின் அளவு ரத்தத்தில் உள்ள வரை) உடலுறவு முடிந்த பின்னரும் நீடிக்கிறது. இம்மருந்தால் ஏற்படும் பக்கவிளைவுகளைப் பட்டியலிட்டால் இதன் ஆபத்துக்கள் புரியும்.
வயாக்ரா செக்ஸ் உணர்வை தற்காலிகமாக மட்டுமே தூண்டி அதிகரிக்கிறது. இம்மருந்தினால் திடீர் பார்வை இழப்பு, திடீர் கேட்புத் திறன் இழப்பு, நெஞ்சு வலி, குமட்டல், வியர்த்தல், மயக்கம், கை, கணுக்கால், பாதம் வீங்குதல், தலைவலி, வயிறு கோளாறு, முதுகுவலி, திடீர் மரணம் போன்றவை ஏற்படலாம்.
வயாக்ரா மூலம் பெறும் ஆண்மை சக்தியை விட மேம்பட்ட அளவிலும் எவ்வித தீங்கும் பக்கவிளைவும் இல்லாமலும் டாமியானா நம்பகமாகப் பலன் தருகிறது. டாமியானாவின் பலன்களைப் பட்டியலிட்டு பார்ப்போம்.
- பாலியல் ஆர்வத்தை தூண்டுகிறது. செயல்திறனை அதிகரிக்கிறது.
- பாலுறுப்புகளில் அதிகக் குருதி பாயச் செய்து தளர்ச்சியை போக்கி வலிமை சேர்க்கிறது.
- ஆண் விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது.
- பெண்களின் பாலியலின் உணர்வுக் குறைபாட்டை நீக்கி நலப்படுத்துகிறது.
- பெண்மை ஹார்மோன் இயக்கச் சமநிலை பேண உதவுகிறது.
- இளம்பெண்களின் தாமத மாதவிடாய், வலிமிக்க மாதவிடாய் போன்ற மாதவிடாய் கோளாறுகளையும், வெள்ளைப்பாடு தொல்லையையும் குணப்படுத்துகிறது.
- மாதவிடாய் நின்றபின் (றிஷீst விமீஸீஷீஜீணீusணீறீ) ஏற்படும் உடலியல் பிரச்னைகளை தணிக்க உதவுகிறது.
- ஆண்களின் விந்தணுக்களைப் பெருக்குவது போல், பெண்களின் கருமுட்டைகளைப் பலப்படுத்துகிறது.
- முதியோர் சிறுநீர் அடக்க முடியாமல் சொட்டுச் சொட்டாக கழிக்கும் உபாதைக்கு நிவாரணம் அளிக்கிறது.
- சுக்கில நீர் ஒழுங்கினை கட்டுப்படுத்தி குணப்படுத்துகிறது.
- மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் அளிக்கிறது. கடுமையான ஒற்றைத் தலைவலிக்கு நம்பகமான நிவாரணம் வழங்குகிறது.
- மனப்பதட்டத்தை தணிக்கிறது.
இத்தனை மருத்துவ குணங்களும் கொண்ட டாமியானா பாலியல் ஊக்கியாகவும், ஆண்&பெண் மலட்டுத்தன்மை நீக்கியாகவும் ஹோமியோபதி சிகிச்சையில் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. இந்திய ஜின்செங் எனப்படும் அஸ்வகந்தா மற்றும் அவீனா சடீவா, செலீனியம் போன்ற ஹோமியோ மருந்துகள், டாமியானாவிற்கு உறுதுணையாகவும் பாலியல் குறைபாடுகளை வேரோடு அகற்றியும் மகிழ்ச்சியான தாம்பத்ய வாழ்க்கைக்கு வழியமைக்கின்றன.

