-டாக்டர்.ஆர்.கே.ஆனந்த்
குழந்தை நல மருத்துவர்

முக்கியமாகக் குழந்தைகள் உள்பட யாருமே அவமதிக்கப்பட விரும்புவதில்லை. பெற்றோர்களுக்குக் கோபம் வரும்தான். வீட்டில் இருந்த கடைசி டம்ளர் பாலையும் கீழே கொட்டினால், அந்தக் குழந்தை மீது நமக்குக் கோபம் வருவது இயல்புதான். அப்படியான சூழ்நிலைகளில், அந்தக் காரியத்தை விமர்சியுங்கள்; குழந்தையை அல்ல!

‘நீ ரொம்ப மோசம்’ என்று சொல்லாதீர்கள். ‘நீ செய்த இந்தக் காரியம் ரொம்ப மோசமானது’ என்று சொல்லுங்கள். குழந்தையை விமரிசனம் செய்கிற வார்த்தைகள், அதன் ஆளுமையைப் பெரிதாகச் சேதப்படுத்துகின்றன. எனவே, சிதறியிருக்கும் பாலைத் துடைத்துச் சுத்தமாக்க குழந்தைக்கு உதவுங்கள்; பிறகு, பால் டம்ளரை எப்படிப் பாதுகாப்பாகக் கையாள வேண்டும் என்று அதற்குக் கற்றுக் கொடுங்கள்.