Technology in the practice of school psychology

ஆசிரியர்: பேராசிரியர் பாஞ்ச் ராமலிங்கம்,
டாக்டர் ஜெரினா பேகம்,
புனிதா போர்புஜாரி தியோரி.

மொழி: ஆங்கிலம்
வெளியீடு: இந்தியன் ஸ்கூல் சைக்காலஜி,
அசோசியேஷன்,17, 14-வது தெரு,கிருஷ்ணா நகர்,
புதுச்சேரி-605 008

செல்:94433 52476
பக்கங்கள்:342
விலை ரூ:600

வீன காலத்தில் மிக அதிகமான உளவியல் பிரச்சினைகளும்,வன் முறைகளும்,வெறுப்பும், தற்கொலைகளும் வளரிளம் பருவத்தில்தான் நடக்கின்றன.தினம் தினம் அப்படி ஏதாவது ஒரு சம்பவம் நமது வாழ்க்கையில் குறுக்கிட்டுகொண்டே இருக்கிறது.அறம் குறித்த பழைய மதிப்பீடுகளெல்லாம் காலாவதியாகிவிட்ட புதிய காலமொன்றில் வளரிளம் பருவத்தினரின் நடவடிக்கைகளும் அந்தக் காலத்தின் மாற்றங்களையெல்லாம் பிரதிபலிக்கும் வகையிலேயே இருக்கும் என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.இந்தப் புற மாறுதல்களை யெல்லாம் கருத்தில் கொள்ளாமல் வளரிளம் பருவத்தினரின் புதிய சிக்கல்களை நம்மால் புரிந்துகொள்ள முடியாது.உண்மையில் இந்தக் காலத்தில் உருவான இந்தத் தலைமுறையைப் புரிந்துகொள்ள வேண்டுமானால் நாம் அவர்களின் அக மற்றும் புறமாற்றங்களையே இன்னும் செறிவாகப் புரிந்துகொள்ள வேண்டும்.

வளர் இளம் பருவத்தினரை எப்படி எதிர்கொள்வது என்று தெரியாமல் தவிப்பது தான் இன்றைய காலத்தில் நாம் சந்தித்துக் கொண்டிருக்கும் மிகப்பெரிய சவால்.இந்த சவாலை எதிர்கொள்ள உதவக்கூடிய புத்தகமாக இந்த பள்ளி உளவியல் புத்தகம் வெளி வந்திருக்கிறது.

பள்ளி மாணவர்களுக்கு புரியும் விதத்தில் கற்பிப்பது எந்த அளவுக்கு முக்கியமோ, அதைவிட முக்கியம் அவர்களது மனதை புரிந்து கொண்டு அவர்களுக்கு வழிகாட்ட வேண்டும். பள்ளி உளவியல் தொடர்பான ஆராய்ச்சியாளர்கள், பேராசிரியர்கள், கல்வியாளர்கள் என்று ஏறக்குறைய 30க்கும் மேற்பட்டவர்களின் படைப்புகள் இந்த நூலில் இடம் பெற்றுள்ளன.

எமோஷனல் இன்டெலிஜென்ஸ் யோகாவின் முக்கியத்துவம் மாணவர்களுக்கு கவுன்சிலிங் வழங்குவதில் உள்ள நவீன வளர்ச்சி மற்றும் முன்னேற்றம்,செயற்கை தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் பயன்பாடு, இணைய பயன்பாடு மற்றும் அடிமைத்தனம், புதிய வேலைவாய்ப்புகள் மற்றும் தொழில்நுட்பக் கல்வி,மனநலம் உள்பட பல்வேறு தலைப்புகளில் விரிவான கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.

பள்ளி கல்லூரிகளில் பணியாற்றம் ஆசிரியர்கள்,உளவியல் நிபுணர்களுக்கு உதவும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது. நூலாசிரியர்கள் பணிகள் சிறக்க நமது இதழ் சார்பில் வாழ்த்துகள்.

-டாக்டர் ஜி. ராஜமோகன்.