றுமணமூட்டிகள்… நீளம், உருளை, தட்டை போன்ற வடிவங்களில் இருந்தாலும், நட்சத்திர வடிவத்தில் வித்தியாசமாகக் காட்சியளிப்பது அன்னாசிப்பூ. எனவே, இது அஞ்சறைப் பெட்டியின் அழகோவியம் எனலாம். ருசிக்கும்போது லவங்கமும் லவங்கப்பட்டையும் சேர்ந்த சுவைக் கலவையைக் கொடுக்கக்கூடியது இது. இனிப்பு மற்றும் கார்ப்புச் சுவைகளை நாவில் ஆங்காங்கே படரவிடும் தன்மை படைத்தது.

நோய் எதிர்ப்புச் சக்தி வழங்கி, பல்வேறு காய்ச்சல் வகைகளைத் தடுக்கும் திறன் படைத்த அன்னாசிப்பூவை, காய்ச்சல் பரவிவரும் காலத்தில் உணவில் பயன்படுத்துவது சிறந்தது. ‘அனித்தோல்’ என்னும் பொருளும் அன்னாசிப்பூவின் மருத்துவ மகத்துவத்துக்குக் காரணமாகிறது.

கல்லீரலுக்குப் பாதிப்பை உண்டாக்கும் ஹெபடைடிஸ் வைரஸ்களின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்தும்.

பசியை தூண்டக்கூடிய, வாய்வை அகற்றக் கூடிய உணவுப் பொருளாக நெடுங்காலமாக உணவுகளில் அன்னாசிப்பு சேர்க்கப்படுகிறது. தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கவும் கருப்பை கோளாறுகளை நிவர்த்தி செய்யவும் இதை மருந்தாக பயன்படுத்தலாம். செரிமான பிரச்சனைகளை சரி செய்வதோடு ஆழ்ந்த உறக்கத்தையும் வரவழைக்கும்.