ழக்கமாக சாப்பிடும் பழங்களை மட்டும் பயன்படுத்தினால் போதாது.விதவிதமான பழங்களை சாப்பிட்டால் புதுப்புது சத்துகள் கிடைக்கும்.

*இந்த பழத்தை பட்டர் ஃப்ரூட் என்றும் சொல்வது உண்டு.

*இதில் எண்ணற்ற சத்துகள் அடங்கியுள்ளன. நல்ல கொழுப்புகள், மெக்னீசியம், பொட்டாசியம்,வைட்டமின் சி,வைட்டமின் கே1, வைட்டமின் பி6 மற்றும் கார்போஹைட்ரேட் போன்றவை குறிப்பிடத்தக்கவை.

*இதில் இருக்கும் கரோட்டினாய்ட்ஸ் எனப்படும் ஆன்ட்டி ஆக்சிடென்டுகள், கொழுப்பில் கரையக்கூடியவை என்பதால் இதயம் காக்கும் பழமாகவும் கொண்டாடப்படுகிறது.

*இந்த பழத்தில் இருக்கும் ஒலியிக் அமிலமானது நல்ல கொழுப்பை அதிகரிப்பதோடு கெட்ட கொழுப்பை குறைப்பதாகவும் இருக்கிறது.

*நார்ச்சத்து அதிகம் இருப்பதால் மலச்சிக்கல் உள்ளவர்கள் அதையும் சாப்பிடலாம்.

*மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் அவகேடோ முக்கிய பங்களிப்பதாகவும் சொல்லப்படுகிறது.

*ரத்த ஓட்டத்தை அதிகரிப்பதோடு ரத்த அழுத்தத்தை குறைக்கிறது.மருந்து மாத்திரைகளுக்கு பதிலாக காய்கறி பழங்களைச் சாப்பிட்டு முழுமையான ஆரோக்கியத்தை பெறலாம்.