
இந்திய ஆண்களில் 94 சதவீதம் பேர் ஆணுறைகளை விரும்புவதில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு (என்.எஃப்.எச்.எஸ்) படி பாலியல் ரீதியாக சுறுசுறுப்பான 97.9 சதவீத ஆண்கள் ஆணுறைகளின் முக்கியத்துவத்தை அறிந்திருக்கிறார்கள். அதே நேரத்தில் 94 சதவீத ஆண்கள் ஆணுறையை பயன்படுத்த விரும்புவதில்லை என்று தெரியவந்துள்ளது.
ஆணுறை பயன்பாட்டு விகிதம் ஆந்திராவில் மிகக் குறைவு. அங்கு குடும்ப திட்டமிடல் நடவடிக்கையாக 0.2 சதவீத ஆண்கள் மட்டுமே ஆணுறைகளைப் பயன்படுத்துகின்றனர். இதைத் தொடர்ந்து தெலுங்கானா 0.5 சதவீதம், தமிழ்நாடு 0.8 சதவீதம், பீகார் 1 சதவீதம், கர்நாடகா 1.3 சதவீதம், புதுவை 0.8 சதவீதம் என உள்ளது.
சண்டிகரில் ஆணுறை பயன்பாட்டு விகிதம் அதிகமாக உள்ளது 27.3 சதவீதம், அதனை அடுத்து டெல்லி 19 சதவீதம், பஞ்சாப் 18.9 சதவீதம் , உத்தரகாண்ட் 16.1 சதவீதம், இமாச்சலபிரதேசம் 12.7 சதவீதம் என உள்ளது.

இந்திய ஆண்கள் ஆணுறைகளைப் பயன்படுத்தத் தயங்குவது மட்டுமல்லாமல், கருத்தடை (வாஸக்டோமி) செய்வதில் அவர்கள் மிகுந்த தயக்கம் காட்டுகின்றனர்.
உலக மக்கள் தொகை எண்ணிக்கையில் தற்போது இந்தியா, சீனாவுக்கு அடுத்தபடியாக 2-வது இடத்தில் இருக்கிறது. இன்னும் எட்டே ஆண்டுகளில் அதாவது 2027-ம் ஆண்டுக்குள் இந்தியா, உலக மக்கள் தொகையில் முதல் இடத்தை பிடிக்கும் என ஐ.நா.சபை அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
உலக மக்கள் தொகை தற்போது 770 கோடியாக உள்ளது. 2050-ம் ஆண்டுக்குள் உலக மக்கள் தொகையின் எண்ணிக்கை மேலும் 200 கோடி அதிகரித்து விடும். 2027-ல் இந்தியா உலக மக்கள் தொகையில் சீனாவை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்து விடும்.
சரி.. இதிலாவது முதலிடத்தில் இருக்கட்டுமே என்று விட்டு விடலாமா என்ன?

