தி.செந்தில்குமார்
பிசியோதெரபிஸ்ட்
 
1.உங்கள் மனநிலையை ஒருமுகப் படுத்துகிறது. 
 
2. உங்கள் கற்றல் திறனை அதிகரிக்கும்.
 
3. தன்னம்பிக்கையை அதிகரிக்கிறது. 
 
4. மூளையின் செயல் திறனை அதிகரித்து ஆரோக்கியமாக வைத்துக்
கொள்ள உதவுகிறது.
 
5. உடல் ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது.
 
6.மனதை தூய்மைப்படுத்தி எதிர்மறை எண்ணங்கள் உருவாகாமல்
தடுக்கிறது.
 
7. உடலுக்கு நோய் எதிர்ப்பு திறனை வலுவூட்டுகிறது.
 
8. மனஅழுத்தத்தை குறைக்கிறது. 
 
9. உள்ளம் மகிழ்ச்சியாக இருக்கும்படி வைத்துக்கொள்கிறது.
 
10.உடல் முதுமையடைவதிலிருந்து காத்து இளமையாக்குகிறது.
 
11. சருமத்திற்கு புத்துணர்ச்சி ஏற்படுத்தி பொலிவூட்டுகிறது.
 
12. ஆழ்ந்த உறக்கத்தை அளித்து உறங்கும் நேரத்தை சீர்படுத்துகிறது
 
13. மூளை வாதத்திலிருந்து நம்மைப் பாதுகாக்கிறது.
 
14.மூட்டுகளின் செயல் திறனை அதிகரிக்கிறது.
 
15.உடல்தசைகளின் வலுவை அதிகரிக்கிறது. 
 
16. மனதில் தேவையற்ற பயம் நீங்கி தைரியமாக இருக்க உதவுகிறது.
 
17.நினைவாற்றலைத் மேம்படுத்துகிறது.
 
 
18. உற்பத்தித் திறனை அதிகரித்து வேலைப் பளுவைக் குறைக்கிறது.
 
19. சிந்திக்கும் திறனையும், புதிய சிந்தனைகள் உருவாவதலையும்
மேம்படுத்துகிறது.
 
20. உடற்கட்டமைப்பை மேம்படுத்துகிறது.
 
21. நம்பிக்கையை அதிகரித்து வாழ்க்கையின் முன்னேற்றத்துக்கு
உதவுகிறது.
 
 
22.அளவாகவும், உடலுக்கு தேவையானதை தேடி உண்ணும் எண்ணத்தை உருவாக்குகிறது.
 
23. வாழும் கால அளவை அதிகரிக்கிறது (LIFE SPAN),
 
24. உடலில் உள்ள அனைத்து எலும்புகளையும் உறுதியாக்குகிறது.
 
25. இதயத்தின் செயல் திறனை வலுப்படுத்துகிறது.
மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பை குறைக்கும்.
 
 26.உடலின் தோற்றப் பொலிவை மேம்படுத்துகிறது.
 
27.உடலின் நோய் எதிர்ப்பு திறனை அதிகரித்து இருமல், சளி
போன்ற சிறிய சிறிய நோய் தொற்றுகளிலிருந்து பாதுகாக்கிறது.
 
28. உடம்பில் தோன்றும் தேவையற்ற கொழுப்புக்களை அகற்றி
இருதயத்தை பாதுகாக்கிறது.
 
29. ஜீரண சக்தியை அதிகரிக்கிறது.
 
30.புற்றுநோயிலிருந்து நம்மை பாதுகாக்கிறது.
 
31. ரத்தக் கொதிப்பை சீரானநிலையில் வைக்க உதவுகிறது.
 
 32. மறதி நோய் ஏற்படாமலிருக்க உதவுகிறது.
 
33. முதுகுவலி ஏற்படாமல் தடுக்கிறது.
 
34. முதுமையில் எலும்புகள் சிதைந்து போவதைத் தடுக்கிறது.
 
35.மனச்சிதைவிலிருந்து பாதுகாக்கிறது.
 
36.சர்க்கரை நோய் வராமலும் வந்தால் அதனால் ஏற்படும் பக்கவிளைவுகளில்
இருந்தும் பாதுகாக்கிறது.
 
37.முதுமையில் ஏற்படும் தசைச் சிதைவிலிருந்து நம்மைப் பாதுகாக்கிறது.
 
38.விளையாட்டுத் திறனை அதிகரித்து வெற்றியை நமதாக்குகிறது.
 
39.நோயின் போது ஏற்படும் வலியை தாங்கிக்கொள்ளும் சக்தியை தருகிறது.
 
40.உடல் இயக்கத்தைச் சீராக்கி மூட்டுத் தசைகள் ஒருங்கிணைத்து இயங்க உதவுகிறது.
 
41.திசுக்களுக்கு போதுமான அளவு பிராணவாயு கிடை
கிடைக்க உதவுகிறது
 
42.உடலுக்கு சோர்வு இல்லாமல் சுறுசுறுப்பையும் உற்சாகத்தையும் வாரி வழங்குகிறது.
 
43.தாம்பத்ய உறவில் உற்சாகமாக ஈடுபட உடற்பயிற்சியின் பங்களிப்பு மிக முக்கியம்.
 
44.தாம்பத்ய உறவின்போது  சுரக்கும் ஹார்மோன்களை சீராக்கி உணர்ச்சிகளை ஊக்குவித்து திருப்தியடைதலை மேம்படுத்துகிறது.
 
45.ரத்த ஓட்டத்தை சீராக்கி ரத்தம் தங்கு தடையின்றி உடல் எங்கும்
பயணிக்க உதவுகிறது.
 
46. நோய்கள் ஏற்படாமல் தடுத்து நம் உடலை அழகாக்கி   ஆனந்தமாக, மன நிறைவோடு கொண்டாட்டத்துடன் வாழ தினமும் உடற்பயிற்சி செய்வோம்.