ரு மருத்துவர் என்பவர் மூன்று அம்சங்களால் தீர்மானிக்கப்படுகிறார். அவை,அவரின் கல்வி, திறமை, எளிதில் அணுகக் கூடிய தன்மை மற்றும் இணக்கமான மனநிலையுடன் இருத்தல். இவற்றையெல்லாம் தாண்டி சமூக அக்கறையும் தொலைநோக்கு பார்வையும் முக்கியம்.
இந்த அளவுகோல் எல்லாவற்றையும் மிஞ்சி… உடல் நலக் குறைவு என்பது வாழ்வின் இருண்ட பகுதி. இருளை ஏசுவதை விட ஒளி ஏற்றுவதே சிறந்தது என உற்சாகமாக செயல்பட்டு பலரின் வாழ்வில் ஒளியேற்றி வருபவர் டாக்டர்.டி.காமராஜ். 
 
குழந்தையில்லாத தம்பதியர் பலருக்கும், தன் சிறப்பான சிகிச்சையின் கீழ் மக்கள் பேற்றை உருவாக்கி, அவர்களின் கண்கண்ட கடவுளாக திகழ்கிறார்.
 
சென்னை வடபழனியில் இருந்து செயல்பட்டாலும் அவரது பணிகள் தமிழகம் முழுமைக்கும் இந்த சமுதாயத்திற்கும் பெரும் தொண்டாகவே தொடர்ந்து கொண்டிருக்கிறது.
 
ஆண்,பெண் இருபாலரையும் பதின்ம வயது தொடங்கி முதுமை எல்லை வரை குறுக்கு வெட்டாக ஆராய்ந்து அனைத்து விதமான பாலியல் சந்தேகங்களுக்கும், குழந்தையின்மை பிரச்சனைகளுக்கும் அறிவியல் பூர்வமான மருத்துவ ரீதியான விளக்கத்தை தருவது; தீர்வு கூறுவது என்பது மாபெரும் சமுதாய பணியாகும்.
 
குழப்பத்தில், அச்சத்தில் இருப்பவர்களின் பிரச்சனைகளை பொறுமையாக காது கொடுத்து கேட்பது, ஆறுதலாக பேசி நம்பிக்கையை விதைப்பது அவரது சிறந்த செயல்பாடு.
 
சென்னையில் கடந்த 25 ஆண்டுகளாக சர்வதேச அளவிலான பாலியல் மாநாடுகளை சிறப்பாக நடத்தி வருகிறார்.முதலில் மருத்துவர்கள் மத்தியில் பாலியல் விழிப்புணர்வை ஏற்படுத்தியவர். எய்ட்ஸ் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் முக்கிய பங்காற்றியவர். பாலியல் கண்காட்சிகளை நடத்துவதோடு மக்களோடு மக்களாக கலந்து பேசி அவர்களோடு மனம் திறந்து உரையாடுகிறார். அவர்களது பிரச்சனைகள் எதுவாக இருந்தாலும் எளிய முறையில் ஆன தீர்வுகளை முன் வைக்கிறார். 
 
பாலியல் மருத்துவ புத்தகங்களை வெளியிடுகிறார். சர்வதேச ஆண்கள் தினம்,பாலியல் தினம்,அவற்றின் அவசியத்தை வலியுறுத்தி நிகழ்ச்சிகள் நடத்துகிறார். பாலியல் பற்றிய ஆரோக்கியமான விவாதங்களுக்கு அறிவியல் பூர்வமான உரையாடல்களுக்கு ஆதாரமாக செயல்படுகிறார். அரங்க கூட்டத்தில் மட்டுமே மருத்துவ அறிவியலை மையப்படுத்திக் கொண்டிருக்காமல், மருத்துவ விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை வீதியில் இறங்கி மனித சங்கிலி வடிவில் நடத்துகிறார்.
 
இந்திய கலாச்சாரத்தில் செக்ஸ் என்பது இன்றும் மறை பொருளாக, வெளிப்படையாக அதைப் பற்றி பேசுவதும், அறிந்து கொள்வதும் ஆகாத செயல் என்ற அவல நிலை தான் உள்ளது. திருமணம் முடிந்த சில வாரங்களிலேயே விவாகரத்து கேட்டு கோர்ட் வாசலில் வந்து நிற்கும் இளம் தம்பதியர் இன்று அதிகரித்துவிட்டனர். இதற்கு மூலகாரணம் தாம்பத்யம் பற்றிய புரிதல் இல்லாமை தான். இதை பல தம்பதியருக்கு புரிய வைத்து அவர்கள் வாழ்வில் மறுமலர்ச்சியை உண்டாக்கியவர் டாக்டர் காமராஜ். அவரது மருத்துவ பணிகளால் பலரது வாழ்க்கையில் புதிய மாற்றங்கள் உருவாகி உள்ளன.
 
மருத்துவம் என்பதே வணிக ரீதியாக மாறிவிட்ட சூழலில், வணிக ரீதியிலும் மனிதநேயத்தோடு செயல்படும் அவரது 30 ஆண்டுகால சீரும் சிறப்புமான மருத்துவ பயணத்தை வியந்து பார்க்கிறேன். தினமும் படிக்கிறார்; எழுதுகிறார்; மருத்துவ அறிவியலை தமிழில் கொண்டுவர போராடுகிறார். ஓய்வறியாத மருத்துவ போராளியாக திறம்பட செயல்பட்டு வருகிறார். அவரை நமது இதழ் சார்பில் வாழ்த்துகிறேன்! பாராட்டுகிறேன்!
 
-அன்புடன் 
டாக்டர் ஜி.ராஜமோகன்