
அதிகச் சத்து உள்ள பழங்களில் வாழைப்பழமும் ஒன்று. பூவன் வாழைப்பழத்தை ஏழைகளின் சத்துணவு என்றே சொல்லலாம். கர்ப்பிணிகளும் தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் வராமல் தடுக்கலாம். வாழைப்பழம் கொடுத்து வளர்க்கப்படும் குழந்தைகளுக்கு வேறு சத்துணவே தேவையில்லை என்று சொல்லலாம். குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்குத் தேவையான முக்கியமான சத்துகள் எல்லாம் எல்லா வகை வாழைப்பழத்திலும் உள்ளன. ஆனால், மக்கள்தான் வாழைப் பழத்தின் முக்கியத்துவத்தை இன்னும் உணராமல் இருக்கிறார்கள். விலை மலிவாகவும், அநேகமாக ஆண்டு முழுவதும் கிடைக்கக் கூடிய வாழைப்பழங்களைத் தினமும் சாப்பிட வேண்டும்.

