பேராசிரியர் டாக்டர் உஷாராவி, டாக்டர் சி.ஏ.ரவி.

உடலுக்கு தசைகள், எலும்புகள் அழகான தோற்றம் கொடுத்தாலும் உயிரியக்கத்தை நடத்திக் கொண்டிருப்பது நரம்பு மண்டலம் தான். அதனால் தான்,நம் தொன்மை மருத்துவங்களான ஆயுர்வேதிக், சித்தா, அக்குபஞ்சர், இயற்கை மருத்துவமுறைகள் ஆகியன நரம்பு மண்டல பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றன. நலமான நரம்புகள், பூமியை கட்டி இழுக்கும் தன்னம்பிக்கையை பிறக்கச் செய்கிறது.மனித குலத்தின் நலன் காக்கிறது. மன்மதனின் வில் வெளியே நரம்புகளில் தான் உள்ளது.

நரம்பு மண்டலம் சீராகவும் சிறப்பாகவும் இருந்தால் நம்முடைய ஒவ்வொரு செயல்களும் திருவிழா கோலமாக இருக்கும். உற்சாகம் கரைபுரளும்.

நரம்புகள் வலு குன்றியோ, சேதமடைந்தோ, நோய்களால் தாக்கப்பட்டிருந்தாலோ மனித வாழ்வு நடை பிணமாகிவிடும். பெரும்பாலான மக்கள் நரம்பு பிரச்னைகளை தொடக்கத்திலேயே அறிந்து கொள்வதில்லை. இது நீண்ட கால பாதிப்புகளுக்கு வழிவகுத்து விடுகிறது.

எனவே, நரம்புகளை எவ்வாறு பேணி பாதுகாப்பது என்பது குறித்து இக்கட்டுரை விவரிக்கிறது.

நரம்புகளின் பணிகள்

மத்திய நரம்பு மண்டலம்,புற நரம்பு மண்டலம்,மூளை மற்றும் முதுகுத் தண்டு ஆகியவற்றை வலை அமைப்பால் ஒன்றிணைக்கிறது.

எண்ணம்,செயல், சிந்தனை ஆகியவற்றின் அடித்தளமாக உள்ளது. உடலியக்கங்களை வழிநடத்தி அன்றாட வாழ்வியல் பணிகளை எளிதாக
தவறாமல் செய்துவருகிறது.
நம் புறக்கட்டுப்பாட்டுக்குள் வராத சுவாசம், இதயம்,ரத்த ஓட்டம், செரிமான இயக்கம் ஆகியவற்றின் இயக்கங்களையும் மேலாண்மை செய்கிறது.

ஏன், எதனால் பிரச்சனை ?

ஊட்டச்சத்தற்ற உணவுகள்,மது, போதைப் பழக்கம், மன அழுத்தம், நோய் தொற்றுகள், நச்சுத் தாக்கம், நரம்புக் காயங்கள், நீரழிவு நோய், மரபணு காரணங்கள் போன்றவைகள் நரம்பு பிரச்சினைகளையும்,அது தொடர்பான பாதிப்புகளையும் உருவாக்கி விடுகின்றன.

ஒரு சில நரம்புகளுக்கு பாதிப்பு என்றால் மோனோநியூரோபதி,பல நரம்புகளுக்கு என்றால் பாலிநியூரோபதி என்று குறிப்பிடுகிறார்கள்.

பாதிப்புகள்

புற நரம்பு மண்டலம் பாதிப்பால் கால்கள்,பாதங்கள்,கைகளில் பிரச்னைகள் ஏற்படும். தன்னியக்க நரம்பியல் பாதிப்பு சுவாசக் கோளாறை உருவாக்கும்.இதய ஆரோக்கியத்தை பாதிக்கும்.ரத்த அழுத்தத்தை தொந்தரவு செய்யும் மற்றும் செரிமான அமைப்பை மோசமாக பாதிக்கலாம். தலைமை நரம்பு மண்டலம் பாதிக்கப்படும் போது மூளை, முதுகுத்தண்டு வடம் உள்ளிட்ட நரம்பியல் கட்டமைப்புகள் சீர்குலைகின்றன. இதனால் பக்கவாதம் ஏற்படுகிறது. மூளை செயல் திறனிழப்பு ஏற்படுகிறது.

பார்கின்சன் நோய், அல்சைமைர் நோய், கால் கை வலிப்பு, மல்டிபள் ஸ்களீரோசிஸ் போன்ற நரம்பியல் பாதிப்புகள் வாழ்நாள் முழுமைக்கும் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தலாம்.

நீரிழிவு நோய், நேரிடையாக நரம்புகளை தாக்குகிறது.கை கால் நடுக்கம், ஆண்மைக் குறைபாடு, நினைவிழப்பு, தடுமாற்றம், முடிவெடுப்பதில் சிரமம்,இதய படபடப்பு,வலி, உணர்வின்மை, புலன்களையும், இனப்பெருக்க உறுப்புகளையும் பயன்படுத்துவதில் பின்னடைவு ஆகியவற்றை ஏற்படுத்துகிறது.

இரட்டை பார்வை கண் பாதிப்பு, எதிர்பாராத பலவீனம்,முன் தொடையில்,பிற உடல் பாகங்களில் வலி, தூக்கமின்மை, மனச்சோர்வு, கவலை,அன்றாட வேலைகளைச் செய்ய முடியாமை உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளுடன் பட்டியல் நீளுகிறது.

ஆயுர்வேத சிகிச்சை

ஆயுர்வேத சிகிச்சை முறைகள் நரம்பு சமநிலையை மீட்டெடுக்கிறது. நரம்பு நோய்களின் அறிகுறிகளை கட்டுப்படுத்தி குறைக்க உதவுகிறது. நரம்புகளின் ஆற்றலை மேம்படுத்துகிறது.

உடல் நிலையைப் பொறுத்து தேவையான ஆயுர்வேத சிகிச்சை முறை திட்டமிடப்படுகிறது. ஒவ்வொரு நோயாளிக்கும் இந்த சிகிச்சை முறைகள் வேறுபடும். ஆயுர்வேத மருந்துகள் நரம்பு நோய்களை அவற்றின் வேர்களிலிருந்து அகற்றுவதற்காக பயன்படுத்தப்படுகின்றன. சிகிச்சைகளும் மருந்துகளும் ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகின்றன.நச்சுகளையும் தோஷங்களையும் அகற்றி நரம்புத் திசுக்களுக்கு புத்துயிர் அளிக்கின்றன.

பஞ்சகர்மா சிகிச்சையின் உதவியுடன் மூன்று தோஷங்களின் சமநிலை பராமரிக்கப்படுகிறது.வாமன, விரேச்சனா,வஸ்தி, நாசி,ரக்த மோக்ஷனா ஆகிய 5 சிகிச்சைகள் மூலம் உடலில் இருந்து நச்சுக்கள், தோஷங்கள் அகற்றப்படுகிறது. மேலும் மருத்துவ மூலிகை எண்ணெய்கள், மூலிகை மருந்துகள், மூலிகை தாது நோய்த்தடுப்பு மருந்துகள் கை கண்ட பலன்களை வழங்கி,நரம்பு நோயாளிகள் விரைந்து குணமடைய உதவுகிறது.

அஸ்வகந்தா, மஞ்சள், சங்குபுஷ்பி,பிராமி போன்ற இயற்கை மூலிகை மருந்துகள் முக்கிய பங்களிப்பு செய்கின்றன. ஆயுர்வேத மூலிகை டானிக்குகள் திசு அளவில் வேலை செய்து நரம்பு மண்டலத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. அபயங்கா எண்ணெய் மசாஜ் சிகிச்சை, அஸ்வகந்தா,பாலா மற்றும் விதரி போன்ற மூலிகைகள் அடங்கிய மருந்து எண்ணெய்கள் நரம்பு திசுக்களை வளர்க்கின்றன. மற்ற பயனுள்ள மூலிகைகளில் இஞ்சி,மஞ்சள் மற்றும் திரிபலா நரம்பு பாதுகாப்பில் முக்கிய பங்களிப்பை வழங்கி வருகின்றன.

உணவு மருத்துவம்

உலர் பழங்கள் நரம்பு மண்டத்தை வலுவாக்கும் திறன் கொண்டவை. உலர் பழங்களில் மெக்னீசியம் சத்து நிறைந்துள்ளது. இது உடலின் நரம்புகளுக்கு மிகவும் முக்கியமான ஊட்டச்சத்து.

பச்சை காய்கறிகளில் வைட்டமின் பி,சி,ஈ, மெக்னீசியம், தாமிரம்,ஃபோலேட் மற்றும் கால்சியம் ஆகியவை நரம்புகளின் பலவீனத்தை நீக்கும்.நரம்பு பிரச்சனைக்குரியவர்கள் உடற்பயிற்சி செய்ய வேண்டும். சோம்பேறித் தனத்தை விட்டொழிக்க வேண்டும். உட்கார்ந்த நிலையிலேயே இருக்கக்கூடாது.

பல்வேறு நரம்பு நோய்களிலிருந்து குணமடைந்த பிறகும் ஆரோக்கியத்தைப் பேணுவதற்கு உணவுக் கட்டுப்பாடுகள், உடற்பயிற்சிகள் மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள் யோகா மற்றும் தியான பயிற்சிகள் ஆகியவை தி சுசான்லி ஆயுர்வேதிக், சித்தா,அக்குபஞ்சர் மருத்துவமனையில் தலை சிறந்த ஆயுர்வேதிக் நிபுணர்களால் பரிந்துரைக்கப்படுகின்றன.

நரம்புகள் வலுப்பெறவும், நரம்பியல் நோய்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ளவும் சிறந்த ஆய்வுகளின் மூலம் உருவாக்கப்பட்ட எங்கள் வீ ஹெர்பல் நிறுவன மருந்துகளும் நரம்பு சிக்கல்களுக்கு தீர்வுகள் வழங்கி நல்வாழ்வை உறுதி செய்கின்றன.

தகவல் தொடர்புக்கு:

தி சுசான்லி அக்குபஞ்சர் மற்றும் ஆயுர்வேதிக் கிளினிக்,
எண்: 11,பாரதி தாசன் தெரு, பிள்ளையார் கோயில் எதிரில், 
மஞ்சக்குப்பம், கடலூர் -607 001.
93676 22256.