சாதாரணமாக பழங்கள் சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.அதிலும் ஆப்பிள் பழங்களை சாப்பிடுவது மிகவும் சத்துள்ளது.பச்சையாக சாப்பிடாமல் வேக வைத்து சாப்பிட்டால் ருசித்து சாப்பிடலாம்.

இரண்டு ஆப்பின் பழங்களை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் போட்டு, தேலையான அளவு நீர் சேர்த்து இரண்டு ஸ்பூன் நாட்டுச் சர்க்கரை மற்றும் ஐந்து கிராம்புகள் சேர்த்து, அரை ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து பாத்திரத்த்திற்கு ஏடு கட்டி, ஐந்து முதல் பத்து நிமிடங்கள் வேக வைக்க வேண்டும். பின்னர் அவிந்த ஆப்பிள் துண்டுகளின் மீது தேன் பரப்பி பரிமாற, மணம் கமழும் சிற்றுண்டி தயார். கிராம்பில் உள்ள நறுமண எண்ணெய்கள், மூக்கை துளைக்கும் வாசனையோடு உங்களைப் பரவசப்படுத்தும்.