குளியல் பொடி

ரோஜா இதழ்கள், ஆவாரம்பூ, கஸ்தூரி மஞ்சள் 50 கிராம், நன்னாரி, வெட்டிவேர், விலாமிச்சை வேர் சிறிதளவு எடுத்துக் கொண்டு பொடித்து குளியல் பொடியாக பயன்படுத்தி குளித்து வரலாம். அழகு கிரீம் விளம்பரத்தில் காட்டும் அழகை விடவும் முகம் பொலிவாக மாறும். பீர்க்கை நாரால் உடலைத் தேய்த்துக் குளித்தால் அழுக்குகள் நீங்கும்.

பேஷியல்

ஒரு துண்டு வெள்ளரிக்காய், 2 தேக்கரண்டி தயிர், 2 தேக்கரண்டி ஓட்ஸ் ஆகியவற்றை கலந்து முகத்தில் பூசி 15 நிமிடங்கள் கழித்து கழுவினால் முகம் பளபளப்பாக மாறும். தேன், பால் ஏடு கலந்த கலவையும் முகத்திற்கு பொலிவைத்தரும்.

கருவளையம் மறைய வேண்டுமா?

உருளைக்கிழங்கை தோல் நீக்கி அரிந்து, சாறு பிழிந்து பஞ்சில் நனைத்து கருவளையத்தின் மீது தொடர்ந்து தடவி வந்தால் கருவளையம் மறையும்.

எலுமிச்சை சாற்றை, தக்காளிப் பழச்சாறுடன் கலந்து கண்களைச் சுற்றி தடவினால் கருவளையம் மறைந்து கண் குளிர்ச்சியாகும்.