
-டாக்டர்.டி.காமராஜ்,
எம்.டி.பாலியல் நிபுணர்
தான் உண்டு, தன்னுடைய வேலை உண்டு என்று இருப்பதை சிலர் நல்ல விஷயமாகக் கருதுவது உண்டு. உண்மையில் அப்படி இருப்பது தனிமைக்கு மட்டுமே வழிவகுக்குமே தவிர நன்மைக்கு அல்ல. எந்த ஒரு விஷயம் என்றாலும் அனைவரிடமும் நட்புடன் பழகி, அன்புடன் பேசிப் பாருங்கள். காணும் எல்லாமே எளிதாகக் தெரியும்.
ஏதாவது ஒரு சிக்கலைத் தீர்க்க நீங்கள் திணறிக் கொண்டிருப்பீர்கள். ஆனால், அதே பிரச்னையை மிக எளிதாகத் தீர்க்கும் வழியை மற்றொரு நண்பர் தெரிந்து வைத்திருக்கலாம். ஆலோசனையில் இருந்து உதவிகள்வரை அனைத்துக்கும் ஒரு நண்பர் வட்டாரம் உங்களுடன் இருக்கிறது என்ற நம்பிக்கையே யானை பலம் தரக்கூடியதாகும். அதனால், அனைவருடனும் நட்புடன் பழகுங்கள்.

