
Photo caption – L To R
•Dr.Ilankumaran Kaliamoorthy,Chief Executive Officer,Apollo Hospitals,Chennai region.
Dr. Neville A.G. Solomon – Director – Paediatric Cardiothoracic Services, Apollo Children’s Hospitals
* Dr. C.S. Muthukumanaran – Senior Consultant & Head, Paediatric Cardiology, Apollo Children’s Hospitals
* Dr.Sushila Narayanasamy,Unit Head,Apollo Women’s and Children’s Hospitals,Chennai
சென்னை, அப்போலோ குழந்தைகள் மருத்துவமனை,50 பெர்குடேனியஸ் ஃபோன்டன் சிகிச்சை செயல்முறைகளை நிகழ்த்தி மருத்துவ உலகில் புதிய சாதனை செய்துள்ளது. சிக்கலான ஒற்றை-இதயக்கீழறை நோயால் பாதிக்கப்பட்ட குறிப்பிட்ட சில குழந்தைகளுக்கு, வழக்கமான திறந்தநிலை இதய ஃபோன்டன் அறுவைசிகிச்சைக்கு மாற்றாக கதீட்டர் அடிப்படையிலான அணுகுமுறையைப் பயன்படுத்தியிருக்கும் இச்சாதனை, மிகவும் பாராட்டுக்குரியது.
உடலில் இரத்த ஓட்டத்தைப் பராமரிக்க ஒரே ஒரு இதய கீழறை மட்டுமே செயல்படும் சிக்கலான இதயக் குறைபாடுகளுடன் சில குழந்தைகள் பிறக்கின்றன. இக்குழந்தைகளுக்கு ஃபோன்டன் செயல்முறையே சிகிச்சையின் இறுதி கட்டமாகும். இது உடலின் கீழ்ப்பகுதியிலிருந்து திரும்பும் இரத்தத்தை நேரடியாக நுரையீரலுக்கு திருப்பி விடுகிறது, இதன் மூலம் அந்த ஒற்றை இதயக் கீழறை ஆக்ஸிஜன் செறிவான இரத்தத்தை உடல் முழுவதும் செலுத்துகிறது.
அப்போலோவின் குழந்தைகளுக்கான இதயவியல் மற்றும் இதய அறுவைசிகிச்சை மருத்துவக் குழுவினரால் உருவாக்கப்பட்டு மேம்படுத்தப்பட்ட இந்த தொழில்நுட்பம், முன்னதாக எந்தவொரு அறுவைசிகிச்சை ஏற்பாடுகளும் இன்றி, அறுவைசிகிச்சையின் போது இரத்த நாளங்கள் வழியாக கதீட்டர்கள், வயர்கள் மற்றும் ஸ்டெண்டுகளைப் பயன்படுத்தி ஃபோன்டன் வழிமுறையை முழுமையாகச் செய்து முடிக்க உதவுகிறது.
குழந்தைகளுக்கான இதயவியல் துறைத் தலைவர் டாக்டர் சி.எஸ். முத்துகுமரன் கூறுகையில், “ஒற்றை-இதயக் கீழறை நோயுள்ள குழந்தைகளுக்கு ஃபோன்டன் கட்டத்திற்கு முன்பே பல பெரிய இதய அறுவைசிகிச்சைகள் செய்ய வேண்டியுள்ளது. உடற்கூறியலும், இரத்த இயக்கவியலும் பொருத்தமாக இருக்குமானால், கதீட்டர் அடிப்படையிலான இச்செயல்முறை மற்றொரு திறந்தநிலை அறுவைசிகிச்சை இல்லாமலேயே ஃபோன்டன் வழிமுறையைச் செய்ய வழிவகுக்கிறது. பெரிய இதய சிகிச்சைக்குட்பட்ட குழந்தைக்கு மற்றொரு அறுவைசிகிச்சையின் வலியைக் குறைப்பதே இதன் நோக்கமாகும்” என்றார்.
இந்த அணுகுமுறை எல்லா குழந்தைகளுக்கும் ஏற்றதாக அமையாது. நோயாளிகளைத் தேர்ந்தெடுப்பதற்கு, நுரையீரல் தமனி உடற்கூறியல் மற்றும் அழுத்தங்கள்,இதய
கீழறையின் செயல்பாடு மற்றும் சிரை வழிகள் உள்ளிட்ட இதய உடற்கூறியல் மற்றும் இரத்த இயக்கவியல் பற்றிய விரிவான மதிப்பீடு தேவைப்படுகிறது. நோயாளியின் நிலையைப் பொறுத்து,எக்கோ கார்டியோகிராபி, சிடி ஸ்கேன் மற்றும் கார்டியாக் கேத்தடரைசேஷன் போன்ற பரிசோதனைகள் தேவைப்படலாம்.
இதய-மார்பறை அறுவைசிகிச்சை சேவைகள் இயக்குநர் டாக்டர் நெவில் ஏ.ஜி. சாலமன் கூறுகையில், “அறுவைசிகிச்சைக்குப் பதிலாக முழுமையான மாற்றாக இருப்பது இப்புதிய தொழில்நுட்பத்தின் நோக்கமல்ல. ஒவ்வொரு குழந்தைக்கும் சிறந்த சிகிச்சையைத் தீர்மானிக்க, இதயவியல் மற்றும் இதய அறுவைசிகிச்சை ஆகிய இரண்டையும் ஒன்றிணைத்துச் செயல்படுவதாகும். சில குழந்தைகளுக்கு அறுவைசிகிச்சையே சிறந்த தேர்வாக இருக்கும்.அதே நேரத்தில் கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்ட சிலருக்கு,இந்த கதீட்டர் அடிப்படையிலான சிகிச்சை சிறந்த மாற்று வழியாகும்” என்றார்.
-ஷைலஜா, Health and beauty.

