
இல்லறம் சிறக்க, கணவன் மனைவி உறவு தழைத்தோங்க உடலும் மனமும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். உடல்பருமனாக உள்ளவர்கள் தாம்பத்யத்தில் ஈடுபடுவது குறைகிறது என ஆய்வுகள் கூறுகின்றன. மாதத்திற்கு இரண்டு முறை தான் என்ற அளவுக்கு குறைகிறது.
இதற்கு முக்கிய காரணம் உடல் எடையினால் உண்டாகும் அசௌகரியமே. உடல் பருமனால் விந்தணு விரைவில் வெளியேறுதல் அல்லது முழு திருப்தியின்மை ஏற்படுவது ஒரு சிலருக்கே. தனது தாழ்வு மனப்பான்மையினாலேயே உடல் உறவை தவிர்க்கின்றனர் என்பதே உண்மை. இல்லற உறவால் உடலில் எரிசக்தி அதிகரிக்கிறது. மற்ற எல்லா பயிற்சிகளை விட கலவியில் அதிக கலோரி எரிக்கப்படுகிறது.
கலவியின் உச்சத்தில் வெளியாகும் எண்டார்பின் உடலுக்கு பல்வேறு நன்மைகளை செய்கிறது. உடலின் புத்துணர்ச்சிக்கும், ஆரோக்கியத்திற்கும் வழி வகுக்கிறது. உடலில் உள்ள அத்தனை நரம்புகளும் தசைகளும் ஒருங்கிணைந்து செயல்படுகின்றன. உடலில் உள்ள வலி குறைகிறது. மனசோர்வு நீங்குகிறது. உணவு செரிமானம் அதிகரிக்கிறது. மொத்தத்தில் செக்ஸ் மிகச்சிறந்த உடற்பயிற்சி என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

