
- அதீத மகிழ்ச்சி அல்லது மற்றவர்கள் சுட்டிக்காட்டும் அளவுக்கு குணமாற்றம்.
- சிடுசிடுப்ப, கோபம், மற்றவர்களோடு வாக்குவாதம், சச்சரவு.
- · வழக்கத்துக்கு மாறான தன்னம்பிக்கை.
- உறக்கமின்மை.
- முன்னைவிட கூடுதலான பேச்சு.
- கட்டுப்படுத்த முடியாத, விரைவான சிந்தனை ஓட்டம்.
- கவனத்தை ஒருநிலைப்படுத்துவதில் சிரமங்கள்.
- வழக்கத்தைவிட கூடுதலான சக்தி, உற்சாகம்.
- முன்பைவிட அதிகமான சுறுசுறுப்பு, பல விஷயங்களில் ஒரே நேரத்தில் ஈடுபடுதல்.
- பாலியல் விஷயங்களில் கூடுதல் ஈடுபாடு.
- அனாவசியமான பணச் செலவுகள்.
- உங்கள் செயல்பாடுகள் வழக்கத்துக்கு மாறானவை, முட்டாள்தனமானவை, ஆபத்தானவை என்று மற்றவர்கள் கூறுவது.
மேற்கண்டவைகளுக்கு எல்லாம் ‘உண்டு’ என்று நீங்கள் விடையளித்தால், அவை யாவும் ஒரே நேரத்தில் ஏற்பட்டதா? இதனால் குடும்பம், பணிபுரிதல், பணக்கஷ்டங்கள், சண்டை சச்சரவு ஏற்பட்டதுண்டா? என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள்.
இவையெல்லாம் இருந்தால், இதை வைத்து மட்டுமே நோய் என்று உறுதிபடக் கூற முடியாது. ஆனாலும், மேற்கூறிய அறிகுறிகள் ஏதாவது இருந்தால் மனநல மருத்துவரை நாடுங்கள்.

