– டாக்டர் டி.காமராஜ் எம்டி, பாலியல் நிபுணர்

ஆண்மைக் குறைவு என்பது தனியொரு நோயல்ல. பல நோய்களின் பக்கவிளைவாகத் தோன்றுகிற அல்லது நோய்களின் அறிகுறிகளுள் ஒன்றாகத் தோன்றுகிற ஒரு குறைபாடு. இதை, அவற்றின் வெளிப்பாடு என்றும் சொல்லலாம்.

திருமணமானது முதல் தனக்கு ஆண்மைக்குறைவு இருக்கலாம் என்ற பயம் உள்ளவர்கள் இருக்கிறார்கள். ஆனால், நாற்பது வயதைக் கடந்த நிலையில்தான் இந்த பாதிப்பு அதிகமாக வெளியில் தெரிகிறது.

பயம் போன்ற மனரீதியான காரணங்களைத் தவிர, சடங்க சம்பிரதாயம் போன்றவற்றில் ஊறிப்போனவர்களை மனைவியராக உடையவர்கள், அத்தகைய கொள்கையில் நாட்டம் உள்ளவர்களுக்கு ஆண்மைக்குறைவு என்பது சாதாரணமான ஒன்று.

காதல் திருமணம் செய்து கொண்டவர்கள், காலப்போக்கில் அந்த ஈர்ப்பு ஆண்மைக் குறைவினால் பாதிக்கப்படும் வாய்பபு அதிகரித்து வருவது எங்கள் ஆராய்ச்சியில் தெரிய வருகிறது.

வேலை, பணம் என்று அலைபவர்களிடமும், கணவன் & மனைவி இருவரும் வேலைக்குப் போகும் நிலையிருக்கும்போதும் அங்கே ஆண்மைக் குறைபாடு தலைகாட்ட ஆரம்பிக்கிறது.

மனைவிக்கோ கணவனுக்கோ காதலுணர்வு அல்லது பாலுணர்வு தோன்றாத சூழல் அமையும்போது, உடலுறவு கொள்ள நேர்ந்தால் ஆண்மைக்குறைவு வந்துவிடுகிறது.

மனைவி உடலளவில் சுத்தமாக இல்லை. வியர்வை நாற்றமும், பொடுகு நாற்றமும், வாய் துர்நாற்றமும் வருகிறது. ப்ரெஷ்ஷாக இருக்கவே செய்வதில்லை என்று நினைக்கும்போது ஆணுக்கும், இதே எண்ணம் பெண்ணுக்கும் தோன்றி உடலுறவு மறுக்கப்படும் நிலையில் ஆண்மைக்குறைவு வந்துவிடுகிறது.

மனைவி மரக்கட்டையாய் படுத்துக் கிடக்கும்போதும், தொடும்போதெல்லாம் கையைத் தூக்கி வீசியெறியும் போதும் ஆண்மைக் குறைவுதான் அவனை அணைத்துக் கொள்கிறது.

கணவன்&மனைவியரில் ஒருவர் எஜமானரைப் போலவும், இன்னொருவர் வேலைக்காரரைப் போலவும் இருக்கும்போது விரக்தி இருப்பதால் கண்டிப்பாக விறைப்புத் தன்மை இருக்காது.

மதுவுடனும், கையில், சிகரெட், பீடியுடனும் வாசம் செய்யும் ஆண்கள் நாளடைவில் உடலுறவு என்ற பந்தத்தை கோட்டை விடுகிறார்கள். இப்படி நிறைய காரணங்களை ஆண்மைக் குறைவுக்கு சொல்லிக் கொண்டே போகலாம்.

ஆனால், உளவியல் துறையும், மருத்துவத் துறையும் வளர்ச்சி அடைந்துவிட்ட நிலையில் இதெல்லாம் ஒரு பெரிய பிரச்னையே இல்லை என்றாகியிருக்கிறது.

உடலுறவு என்பது பல மணி நேரம் நீடிக்கும் என்பது பைத்தியக்காரத்தனமான வாதம். ஆணுக்கும் பெண்ணுக்கும் சில நிமிடங்களிலேயே உச்சக்கட்டம் வந்துவிடும். அதன்பிறகு உடலுறவு வலி தருவதாக & நாட்டம் குன்றியதாக இருக்கும் என்பதை பலர் அறியாமல் இருக்கிறார்கள்.

ஒருவருக்கு இந்தக் காரணத்தினால் ஆண்மைக் குறை வந்திருக்கிறது என்றால், அந்தக் காரணத்தை சரிசெய்து கொள்ளும்போது தானாகவே அதனால் வந்த குறைபாடும் சரியாகி விடும். இதற்காகத்தான் கவுன்சலிங் என்ற அற்புதமான முறை நடைமுறையில் இருக்கிறது. இந்த கவுன்சலிங்கை எடுத்துக் கொண்டு அதன்படி நடந்தாலே ஆண்மைக் குறைவைத் தவிர்க்கலாம். இதற்காக சிட்டுக்குருவி, மன்மத லேகியமு, குதிரைத் திறன் கொண்ட மாத்திரைகளும, காயகல்பங்களும் தேவைப்படாது.

ஆண்மைக் குறைவுக்கு என்று வரும்போது அதற்கான காரணம் என்னவென்று யோசித்து அறிய வேண்டும். அது குறித்து மனைவியிடமும் பேச வேண்டும். மனம் விட்டுப் போது நமக்குள்ள குறைகளால் தன்மானம், ஆண்மை ஆகியவை குறைந்துவிடுவதில்லை. மாறாக அவையெல்லாம் அதிகரிக்கும் வழிகள் பிறக்கின்றன.

செக்ஸ் மட்டுமே பெண்ணைத் திருப்திபடுத்தும் என பலர் தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். பேச்சுத்தான் அவர்களைத் திருப்திபடுத்தும். மனைவியிடம் உடலுறவைத் தூண்டும் விதமாக பேசுவது ஒரு கலை. இதை வழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். ஒருவருக்கு ஒருவர் இவ்வாறு பேசிக் கொள்ளும்போது விறைப்புத்தன்மை ஏற்படும்.

ஒருவருக்கு அதிக செக்ஸ் தேவைப்படுகிறது; இன்னொருவருக்கு அது தேவைப்படுவதில்லை. இவன் எப்போதும் செக்ஸ் செக்ஸ் என்று அலைகிறான் என அவளும், இவள் எப்போதும் நிராகரிக்கிறாள் என்று அவனும் நினைத்துக் கொள்ளும்போது வெறுப்பு ஏற்படுகிறது. இந்த வெறுப்பினால் பாதிக்கப்படுவது ஆண். ஏனெனில் அவனுக்குத்தான் ஆண்மைக் குறைவு வந்துவிடுகிறது. அதன் பிறகு நினைத்தாலும் ஆணுறுப்பு எழுந்திருக்காது.

காரணங்கள்

உடலுறவு பற்றிய எண்ணம், உணர்ச்சி, கற்பனை போன்றவை குறைந்து விடுவது ஒரு காரணம்.

20 வயதில் எப்போதுமே இதயத்தில் இருந்த செக்ஸ் எண்ணங்கள், உடலில் இருந்த உணர்வோட்டங்கள் நாற்பது வயதில் இருக்காது. ஏனென்றால், இருபதில் சுரந்த டெஸ்டோஸ்டீரான் ஹார்மோன நாற்பதில் அதே அளவு சுரப்பதில்லை. இது ஒரு காரணம்.

கடமைகள், பணப் பிரச்னைகள் போன்ற பல்வேறு சிந்தனைகள் உணர்வை திசை திருப்பிவிடுவது இன்னொரு காரணம்.

மன இறுக்கம், தன் துணைவரோடு கொள்ளும் செக்ஸில் திருப்தி இல்லாமை, உறவுமுறை சீரின்மை, காரணமற்ற பயம், செக்ஸ் பற்றிய டென்ஷன்.. இப்படி நிறைய விஷயங்கள்தான் செக்ஸ் அலுத்துப் போக காரணங்களாக இருக்கின்றன.

பிரச்னைகளை சரிசெய்து கொள்ள மனம்விட்டுப் பேசுங்கள். ஒருவருக்கொருவர் பிடித்ததுபோல் நடந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். அதாவது தொடுதல் முறையில் ஒருவரை ஒருவர் தூண்டிக் கொள்ள வேண்டும். எதிர்பாராத நேரத்தில் எதிர்பார்க்காத இடத்தில் முத்தமிடுதல், ஒருவர் உறுப்பை இன்னொருவர் தொட்டோ பிடித்தோ பாராட்டிக் கொள்ளுதல் போன்றவற்றை மேற்கொண்டால் ஆசை ஆயுள் முழுவதும் குறையாமல் இருக்கும். ஆண்மைக் குறைவு என்ற பேச்சுக்கே இடமிருக்காது.

எல்லாம் பெண்ணின் கையில்

படுக்கையறை என்பது உறங்குவதற்கு மட்டுமல்ல; உணர்ச்சிகளுக்கு வடிகால்களை உண்டாக்கும் இடமும் உறவுமுறைகளை சீரமைக்கும் இடமும் அதுதான்.

மனைவியானவர் படுக்கையில் தாசியைப் போல் நடந்து கொள்ள வேண்டும் என்ற பழமொழியைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். தம்பதியர் இருவர் மட்டுமே இருக்கும்போது ஆசையை அதிகப்படுத்தும் வகையில் நடந்து கொள்ள வேண்டுமே தவிர, ஆத்திரம் உண்டாகும் வகையிலோ, வெறுப்பு உண்டாகும் வகையிலோ நடந்து கொள்ளக் கூடாது.

படுக்கையறையில் கணவனின் உடலை தன் சொந்த உடலாக மனைவியும், மனைவியின் உடலை தன் சொந்த உடலாக கணவனும் நினைத்துக் கொள்ள வேண்டும். அதை நடைமுறைப்படுத்த வேண்டும். அப்போதுதான் உடலுறவில் சிறப்பாக செயல்பட முடியும்.

பெண்கள்தான் ஆண்களுக்கு இந்த விஷயத்தில் ஆசிரியரைப் போலச் செயல்பட்டு ஆணின் ஆசையை அதிகரிக்கச் செய்ய வேண்டுமே தவிர, ஆண் ஏதாவது செய்து விட்டுப் போகட்டும் என்று இருந்துவிடக் கூடாது. ஆணைக் கட்டி வைப்பதும், கட்டுத் தளர்ந்தவனாக வைப்பதும் பெண்ணின் கையில்தான் இருக்கிறது. ஆண்கள் எப்போதுமே தோலுக்கும், கவர்ச்சிக்கும் மயங்குபவர்கள். அதனால் உங்களை அலங்கரித்துக் கொண்டு கவர்ச்சியாக காட்சி கொடுங்கள். ஆணுக்கு ஆண்மைக் குறைவு வராது.

மாற்றம் முக்கியம்

ஒரே இடத்தில் செக்ஸ் வைத்துக் கொள்ளாமல் இடங்களை அடிக்கடி மாற்றிக் கொள்ள வேண்டும். இவ்வாறு புதுப்புது இடங்களை உடலுறவுக்காக தேர்ந்தெடுத்து பயன்படுத்தும்போது விறைப்புத் தன்மை அதிகரித்து முழுமையான உடலுறவு வாய்க்கும்.

உடலுறவு மட்டுமே முக்கியம் என்பதில்லை. மாறாக பேச்சு, மனைவிக்காக நேரம் ஒதுக்குதல், கொஞ்சுதல், உடலுறவு தவிர்த்த முறைகளில் பெண்ணுக்கு இன்பம் அளித்தல் போன்ற செய்கைகளில் ஈடுபடலாம்.

மனதளவில் உடலுறவு வேட்கை இல்லாமல் இருந்தால் மருத்துவ கவுன்சலிங் மூலம் அதை அதிகரிக்கும் வழிகளைத் தெரிந்து கொள்ளலாம்.