புத்தக அறிமுகம்

ப்ளையிங் சைக்காலஜி ஃபார் புரபஷ்னல் எக்சலன்ஸ் (Applying Psychology For Professional Excellence)

தொகுப்பு ஆசிரியர்: பேராசிரியர் பாஞ்ச் ராமலிங்கம்
வெளியீடு: இந்தியன் ஸ்கூல் ஆஃப் சைக்காலஜி அசோசியேஷன்,
எண் 17,14 வது தெரு, கிருஷ்ணா நகர்,
புதுச்சேரி -605 008.
9443352476
பக்கங்கள்:731
விலை ரூபாய்:950/

நாம் அனைவரும் உடல்நலத்தைப் பேணி பாதுகாக்கிறோம். உடல்நலத்திற்கான அக்கறையும் விழிப்புணர்வும் தற்பபோது அதிகரித்து வருகிறது.அதே சமயம், மனநலத்தையும் நாம் பேணிக்காக்க விரும்புகிறோம்.ஆனால் அதற்கான வழிமுறைகளும், மற்றவைகளும் நமக்கு எளிதில் கிட்டுவதில்லை. பெரும்பாலும் தத்துவார்த்த விளக்கங்களும், வேதாந்த சித்தாந்த கதைகள் மற்றும் எடுத்துகாட்டுகளும் தான் கிடைக்கின்றன. அறிவியல்பூர்வமாக, அனுபவப்பூர்வமாக, அர்த்தரீதியாக ‘மனம் என்றால் என்ன?’, ‘மனநலம் என்றால் என்ன…?”மனநலத்தை பேணுவது எப்படி ?’ என்று மக்கள் அறிய விரும்புகிறார்கள், தேடுகிறார்கள்.சில சமயங்களில் தேடி அலையவும் செய்கிறார்கள். திருத்தமான பதில்கள் கிடைப்பதில்லை.

உளவியலை-சைக்காலஜியை மக்கள் மத்தியில் அறிமுகம் செய்யவும், அன்றாட வாழ்வில் நடைமுறையில் பயன் படுத்தி மகிழ்ச்சியாக வாழவும் உதவும் வகையில் பல்வேறு வகையான பணிகளை செய்து வருபவர் புதுச்சேரி பேராசிரியர் பாஞ்ச் ராமலிங்கம்.அவர் தொகுப்பில் வெளி வந்து உள்ளது இந்த அறிவுப் பொக்கிஷம்.

தி இந்தியன் அகடமி ஆஃப் அப்ளைடு சைக்காலஜி(IAAP)

அமைப்பின் சார்பாக பிப்ரவரி 2024ல் நடைபெற்ற 28வது சர்வதேச,59வது தேசிய அளவிலான கருத்தரங்கின் போது வெளியான புத்தகம்.

உளவியல் கல்வியை சர்வதேச தரத்தில் மேம்படுத்தவும், ஆசிரியர்கள் மத்தியில் கொண்டு சேர்க்கவும் அரும்பாடு பட்டு வருகிறார் இந்நூல் ஆசிரியர்.

உளவியல் துறையில் நிபுணத்துவம் பெற்ற பல்வேறு பேராசிரியர்களின் ஆராய்ச்சி கட்டுரைகள் இந்த தொகுப்பில் இடம் பெற்றுள்ளன.

முதியோர் நலன்,ஓய்வு பெற்ற விளையாட்டு வீரர்கள் வாழ்வியல் மற்றும் பிரச்சனைகள், தற்போது இளைஞர்கள் மத்தியில் உள்ள காதல், பெண்களின் மன அழுத்தம்,ஆசிரியர்களின் மனநிலை,வேலைக்குப் போகும் பெண்களின் பிரச்சனைகள்,தலைமை பண்பு மற்றும் ஆளுமை, டீனேஜ் பருவத்தினரின் பிரச்சனைகள்… உட்பட ஏராளமான தலைப்புகளில் மிகவும் ஆழமான அறிவுப்பூர்வமான கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.

தற்போது மக்கள் மத்தியில் உள்ள உளவியல் பிரச்சனைகளை தீவிரமாக ஆராய்வது டன் அதற்கான அறிவியல் பூர்வமான தீர்வுகளையும் முன் வைத்திருப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

மக்களின் மன நல பிரச்சனைகளை மருத்துவ ரீதியாக அறிந்து கொள்ள உதவும்.

பேராசிரியர் பாஞ்ச் ராமலிங்கத்திற்கு ஹெல்த் அண்ட் பியூட்டி இதழ் சார்பாக பாராட்டி வாழ்த்துகிறோம்.

ப.தங்கமுத்து, சென்னை