– நிறுவனர் ஜி.சண்முகம்

நம் முன்னோர்கள் அவர்கள் வாழ்க்கைக்கும், எதிர்கால சந்ததியினருக்கும், உடல் ஆரோக்கியத்திற்கும் எதெல்லாம் உகந்தது எனக் கண்டறிந்தால் மரங்கள் நட்டார்கள். நீர் சேகரிப்புக்காக குளங்கள் அமைத்தார்கள். அவைகள் சுகாதார சுற்று சூழலோடு மனிதர்கள் வாழ அத்தியாவசியமானது.

மரங்களின் வேர்பிடிப்புகளில் சேகரிக்கப்பட்ட நீர், குளம், குட்டைகளில் சேகரிக்கப்பட்ட நீர் உயிரினங்களின் நலனுக்கு, ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவியது.
உயிர் வாழ்க்கைக்கு என அவர்கள் அமைத்துக் கொடுத்தவை அனைத்தும் இன்றைய நவீன வாழ்க்கை சூழலில் காண அரிதாகி விட்டன. இவற்றில் மிக பிரதானமான நீர்.. குடிநீர். பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப நீர்வளம் பெருகவில்லை. காரணம் மழையின்மை மட்டுமல்ல.

இயற்கையின் காலமாற்றத்தால் மட்டுமல்ல, மனிதர்கள் சுற்றுசூழலை பேணுவதில் அக்கறை காட்டாததும், இத்தகைய விளைவுகளுக்கு காரணங்களாகும். இது மறுக்க முடியாத உண்மை.
இன்றைய சூழலில், மனிதர்கள் பெரிதும் எதிர்பார்க்கிற நீர்.. நீர்! நிலத்தடி நீராக அங்கு, இங்கு என நிறையவோ, சொற்பமாகக் கிடைத்தாலும் அவை குடிப்பதற்கேற்ற நன்னீராக இருக்க வேண்டும். மாசு, கலவைகள் கூடியதாக இருந்தால் சுத்திகரிக்கப்பட வேண்டும்.

இதை பெரிதாக எண்ணியே எங்களின் ‘குளோபல் என்வைரோ சிஸ்டம்ஸ்’ & சுத்திகரிப்பு நிறுவனம் உருவானது.

மக்களின் உடல் ஆரோக்கியத்திற்கு பெரிதும் அவசியமான நன்னீர் வழங்கும் சேவையில் நாங்கள் என்பதும் மகிழ்ச்சியளிக்கிறது. எங்களின் வளர்ச்சி…..

மிக சாதாராண குடும்பம். கோவிந்தராஜ், மணிமேகலை என் பெற்றோர். எளிமையாக வாழ்ந்தபோதும், நான் தொழிற்கல்வியைக் கற்று பொறியாளர் நிலை உயர்வடைய வைத்தார்கள்.
வெளிநாட்டு வேலைக்கு முயற்சித்தபோது.. சிங்கப்பூரில் பணிபுரிய வாய்ப்பு கிடைத்தது. அது உலகளவில் புகழ்பெற்ற நீர் சுத்திகரிப்பு ஆலை. சாதாரண ஊழியராகச் சேர்ந்தேன். கடல் நீரை மற்றும் ரசாயனத்தன்மை மிகுந்த உவர்ப்பு சுவை கொண்ட நிலத்தடி நீரை, குடிப்பதற்கு ஏற்றவகையில் மாற்றும் தொழில்நுட்ப வழிமுறைகள் அனைத்தையும் கற்றுக் கொண்டேன்.

படிப்படியாக பல்வேறு பொறுப்புகளை வகித்தேன். பொறியாளராகவும் பதவி உயர்வு பெற்றேன். என் சீரிய பணியை பாராட்டும் வகையில், ‘மிகச் சிறந்த ஊழியர்’ என்ற விருதை வழங்கி கௌரவித்தது. அங்கு 6 ஆண்டுகள் பணிக்குப் பிறகு சென்னைக்கு திரும்பினேன். தமிழகத்தில் இதே துறையைச் சார்ந்த பல்வேறு நிறுவனத்திலும், குறிப்பாக தூத்துக்குடியில் உள்ள ஒரு நிறுவனத்திலும் பணி & என 12 ஆண்டுகள் பணி செய்தேன். தொழில் அனுபவங்கள் மறக்க முடியாதவை.

ஒரு கல்லூரியில் ஆசிரியராகப் பணிபுரிந்த சத்யா எம்எஸ்சி, எம்.ஃபில் பட்டதாரி என் மனைவியானார்.

மாத வருமானத்திற்கு வேலை செய்து வந்தத் தருணங்களில் கூட; வாழ்க்கையில் உயர வேண்டும். சாதனைகள் புரிய வேண்டும் என்கிற உத்வேகமும் என்னுள் அதிகரித்தது. அதனால் இத்துறை சார்ந்த ஒரு நிறுவனத்தை, சொந்தமாக ஆரம்பிக்க எண்ணம் உதித்தது.

ஸ்பெயின், இத்தாலி, இலங்கை, மலேசியா போன்ற நாடுகளுக்கும் சென்று, அங்கு செயல்பட்டு வரும் நீர் சுத்திகரிப்பு ஆலைகளைப் பார்த்து வந்த அனுபவமும் எனக்கு இருந்தது. அதே சமயம்.. நீர் சுத்திகரிப்பு தொழிலுக்கான தேவை இங்கு அதிகம் இருப்பதை அனுபவ ரீதியாக உணர்ந்து 2014, டிசம்பர் மாதம் ‘குளோபல் என்வைரோ சிஸ்டம்ஸ்’ & நிறுவனத்தை தொடங்கினேன். அதன் முதன்மை செயலாக்க இயக்கநராக தற்போது செயல்படுகிறேன்.

‘குளோபல் என்வைரோ சிஸ்டம்ஸ்’ துவக்கியவுடன், கிடைத்த பணிகளை நானே செய்து வந்தேன். என் செயல்திறனையும், வேகத்தையும் கண்டு.. ஆலைகள் நிறுவுதல், பழுது நீக்குதல், ஆலோசனைப் பணிகள் ஆகியவற்றை செய்து கொடுக்கும்படி, பல்வேறு நிறுவனங்கள் அழைத்தன. கடந்த 5 ஆண்டுகளில் ‘குளோபல் என்வைரோ சிஸ்டம்ஸ்’ படிப்படியாக வளர்ந்து, எதிர்பார்த்த இலக்கை எட்டியது. தற்போது 300 ஊழியர்கள் பணிபுரிகிறார்கள்.

டிசைன், ஆபரேஷன், சர்வீஸ், ஸ்பேர்ஸ், கெமிக்கல் சப்ளை, மனிதவள மேம்பாடு மற்றும் ஆலோசனை வழங்குதல் போன்ற பணிகளை செய்கிறோம். இவற்றோடு நடுவண் அரசு நிறுவனமான நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷனுக்குத் தேவைப்படும் பணிகளையும் செய்து கொடுக்கிறோம்.

கடந்த ஆண்டு முதல் சமுத்ரா என்ற பெயரில் மினரல் வாட்டரையும் தயாரித்து, விற்பனையும் செய்கிறோம். இதற்கான தொழிற்சாலை சென்னை அருகே படப்பையில் உள்ளது. 300 எம்எல் முதல் 20 லிட்டர் வரையிலான பாட்டில் / கேன்களில் அடைத்து விற்கிறோம். திருமண வைபவம், மாநாடுகள், விழாக்களுக்கு ஆர்டரின் பேரில் 20 ஆயிரம் லிட்டர் நன்னீரை சப்ளை செய்ய முடியும்.
திரும்பிய பக்கமெல்லாம் அடுக்குமாடி குடியிருப்புகள், தொழிற்சாலைகள் பரவலாக உள்ளன. அவற்றிலிருந்து வெளியேறம் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்யும் சாதனங்கள், கருவிகள் மேலும் தொழிற்கூடம் மற்றும் பரிசோதனை கூடமும் எங்களிடம் உள்ளது. அனுபவமிக்க பொறியாளர்கள், பணியாளர்களும் கைகோர்த்து, சவால் மிகும் இத்தொழிலை திறம்பட செய்கிறோம்.

இந்தியா மட்டுமின்றி, வெளிநாடுகளுக்கும் பயணிக்கும் நோக்கம் உள்ளது. அவ்வகையில் எங்கள் நிறுவனத்தின் ஒரு கிளை அலுவலகம் விரைவில் சிங்கப்பூரில் ஆரம்பிக்கப் போகிறோம்.
ஒரு மனிதனுக்கு சராசரியாக 200 லிட்டர் நீர் & தினசரி பயன்பாட்டிற்குத் தேவைப்படுகிறது. எண்ணிக்கையில் இருவர்/மூவர் உள்ள சிறிய குடும்பத்திற்கு கூட தினசரி 500 லிட்டருக்கும் மேல் தேவைப்படும். குறைந்தளவு 500 லிட்டர் நீரைக் கூட ஆர்டரின் பேரில் எங்களால் சுத்திகரிப்பு செய்து தரமுடியும். ஆகவே சிறிய அலுவலகம், சிறுதொழிற்கூடம், மருத்துவமனைகள், ஓட்டல்கள், எங்களை அணுகினால் அவர்களின் தேவைக்கேற்ப, சிறந்த சேவையால் நன்னீராக்கி தர முடியும் என்பது உறுதி.

எந்த பொருளாகட்டும், சாதனங்களாகட்டும், ஏதாயிருந்தாலும், மனிதர்களின் தேவையைப் பூர்த்தி செய்ய முடியாப் பற்றாக்குறையோ, போதிய உற்பத்தி இன்மையோ, அத்தியாவசியத் தாது மற்றும் அடிப்படைகளோ கிடைப்பதில் அரிதானல்.. மாற்றுக்கு வழி அறிய வேண்டியுள்ளது. அதற்கான ஆராய்ச்சிகளும் தொடர்கின்றன. அவ்வகையில் இன்றைய பற்றாக்குறையைப் போக்க.. பரீட்சார்த்த முறையில் காற்றில் இருந்து கிடைக்கும் ஈரத்தன்மையை கிரகித்து.. அதிலிருந்து குடிநீர் தயாரிக்க முயற்சித்து வருகிறோம். அடிப்படை பணிகள் துவங்கிவிட்டன. ஓரிரு மாதங்களில், எங்கள் நிறுவனத்திற்கே உரிய பிராண்டின் பெயரில் சந்தையில் விற்பனைக்கு வரும்.
நிறைவாக, கடல் நீரை சுத்திகரித்து பெருமளவில் வழங்கம் பணி/அதன் தேவை நாளும் அதிகரித்து வருவதால் & எங்கள் குளோபல் என்வைரோ சிஸ்டம்ஸ் சுயமாகவே இதை செய்து வருகிறது. எங்களை அணுகுவோரின் தேவைக்கேற்ப செய்து கொடுக்கவும் முடியும்.

என் துணைவியார் சத்யா, எங்கள் நிறுவனத்தின் நிதி மற்றும் நிர்வாகத்தை கவனித்துக் கொள்கிறார். கடந்த ஆண்டு 6 கோடி ரூபாய் ‘டர்ன் ஓவர்’ என்றளவிற்கு வணிகம் உயர்ந்துள்ளது.
பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், தொழிற்சாலைகள், ஓட்டல்கள், மருத்துவமனைகள், அடுக்குமாடி குடியிருப்புகள், சிறிய/பெரிய குடும்பங்களின் தேவைக்கேற்ற நன்னீரை ஆர்டரின் பேரில் வழங்க முடியும். சுத்திகரிப்பு செய்து தரவும் முடியும்.

பயனாளிகளின் ஆரோக்கியத்தை கவனத்தில் கொண்டு தயாரிக்கப்படும் எங்களின் சமுத்ரா  மினரல் வாட்டருக்கு விற்பனை முகவர்களை, விநியோகஸ்தர்களை வரவேற்கிறோம்.

தொடர்புக்கு:
ஜி.சண்முகம் & 7299974101.
படங்கள்:ஸ்ரீராம் செல்வராஜ்