
தானாக வளரும் தாவரங்களில் ஒன்று நித்யகல்யாணி.
இதை பலருடைய தோட்டங்களில் அழகு தாவரமாக வளர்க்கப்படுகிறது. இதில் மருத்துவக் குணங்கள் மிகுதியாக உள்ளது.
நித்யகல்யாணி பெரும்பாலும் சுடுகாட்டில் காணப்படுவதால் இதை சுடுகாட்டு மல்லி, கல்லறைப் பூ உள்ளிட்ட பல்வேறு பெயர்களில் அழைக்கின்றனர்.நித்ய கல்யாணியில் இலைகள், பூ, தண்டு மற்றும் வேர்கள் என அனைத்தும் மருத்துவப் பயனுள்ளவை.
நித்ய கல்யாணி ரத்த அழுத்தத்தை குணப்படுத்தக் கூடியது.5 அல்லது 6 நித்ய கல்யாணி பூக்களை அரை லிட்டர் நீரில் போட்டுக் காய்ச்சி கால் லிட்டராக்கி ஒரு நாளைக்கு 4 முறை குடித்து வந்தால் அதிக தாகம், அதிக சிறுநீர்ப்போக்கு மற்றும் அதனால் ஏற்படும் உடல் பலவீனம் யாவும் குணமாகும்.அத்துடன் பசியின்மையும் விலகும்.
நித்யகல்யாணியின் வேரை உலர்த்திப் பொடித்து, ஒரு தேக்கரண்டி அளவு வாயில் போட்டு சுடுநீர் குடித்து வர நீரிழிவு நோய் குணமாகும்.இதன் வேர்த்தண்டுகளில் இருந்து ரத்தப் புற்றுநோய்க்கு மருந்து தயாரிக்கப்படுகிறது.இதன் பூக்களில் இருந்து தோல் நோய்களுக்கான மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன.

