
அலர்ஜி போக்கும் மிளகு!
அலர்ஜியால் வரும் மூக்கடைப்பு,தும்மல், நீரேற்றம்,தோல் அரிப்பு,திடீர் தோல் படைகள்,கண் எரிச்சல்,மூக்கு நுனியில் ஏற்படும் அரிப்பு,மூச்சிரைப்பு போன்ற அலர்ஜி நோய்களை விரட்டும் இயல்பு மிளகுக்கு உண்டு.
சளித்தொல்லைக்கு
பனிக்காலங்களில் சிறு குழந்தைகளுக்கு நெஞ்சில் சளி ஏற்பட்டால், அதை வெளியேற்ற இருமல் வரும். இதற்கு மிளகுதான் கைகண்ட மருந்து. குழந்தை இரவில் திடீரென எழுந்து, தொடர்ச்சியாக இருமலில் அவதியுறும்போது
நெஞ்சில் கட்டியிருக்கும் சனியை, இருமலால் வெளியேற்ற முடியாமல் திணறும். உடனே தடாலடியாக கடையில் இருமல் மருந்தை வாங்கிக்கொடுப்பது தவறு. பெரும்பாலான இருமல் மருந்துகள், இருமலை உடனடியாக நிறுத்தி, சளியை உள்ளுக்குள் உறைய வைத்து, நோயைக் குணப்படுத்தாமல் விட்டுவிடும்.
மிளகு, சளியை இளக்கி வெளியேற்றி இருமலைக் குறைக்க உதவும். நான்கு மிளகைப் பொடித்து, ஒரு ஸ்பூன் தேனில் குழைத்து, இளஞ்சூடாக்கி, கால் டம்ளர் தண்ணீரில் கலந்து இரவில் கொடுக்க, சனி வெளியேறி இருமலை நிறுத்தும். சில நேரங்களில் வாந்தியில்கூட சளி வெளியேறும். அதைப் பார்த்து பயப்படவேண்டாம். ஒரு வயதுக்குட்பட்ட பச்சிளம் குழந்தைகளுக்கு இதைக் கொடுக்கவேண்டாம்.
தோல் நோய்க்கு மிளகு
தோலில் ஏற்படும் திடீர் தடிப்புக்கு, மிளகுக் கஷாயம் நல்ல மருந்து. தலையில் வரும் புழுவெட்டுக்குச் சின்ன வெங்காயம், மிளகு இரண்டையும் அரைத்து, வெளிப்பூச்சாகப் பூச பிரச்னை சரியாகும்.
பனிக்காலங்களில் நெஞ்சுச் சளி கட்டாமல் இருக்க, எல்லா வயதினரும் தினமும், உணவில் மிளகைக் கட்டாயம் சேர்த்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக ஆஸ்துமா நோயாளிகள், மிளகைத் தினமும் ஏதாவது ஒரு விதத்தில், உணவில் சேர்த்துவர, இளைப்பின் தீவிரம் குறையும்.

