மிழ் நாட்டில் கல்வி நிறுவனங்களை தொடங்கி, லட்சக்கணக்கான மாணவர்களை உருவாக்கிய எஸ். ஆர்.எம். குழுமத்தின் நிறுவனர் பாரிவேந்தர் அவர்களின் 88 வது பிறந்த நாளில், சிம்ஸ் அழகியல் நிறுவனம் தொடங்கப்படுகிறது.

மருத்துவ சேவையில் தமிழ்நாட்டின் பிரபலமான சென்னை சிம்ஸ் மருத்துவமனை, அழகுசார் அறுவைசிகிச்சை மற்றும் மருத்துவத்திற்கான ‘சிம்ஸ் அழகியல் நிறுவனம்’ (SAI) தொடங்கப்பட்டுள்ளதை பெருமையுடன் அறிவித்துள்ளது. இது அனைத்து வகையான அழகு சிகிச்சைகளையும் ஒன்றிணைத்து ஒரே இடத்தில் வழங்கும் ஒரு சிறப்பு மையமாகும். நவீன மருத்துவ முறைகளையும், நிபுணர்களின் அனுபவத்தையும் ஒன்றிணைத்து, ஒவ்வொரு நோயாளியின் தேவைக்கேற்ப தனிப்பயனாக்கப்பட்ட சிகிச்சைகளை வழங்குவது இம்மையத்தின் சிறப்பம்சமாகும்.

இந்த புதிய சிகிச்சை மையத்தை தனித்துவமானதாக ஆக்குவது, பிளாஸ்டிக் சர்ஜரி, தோல் மருத்துவம், அழகியல் சார்ந்த மகப்பேறு & மகளிர் மருத்துவம் மற்றும் முகம் மற்றும் பற்கள் சீரமைப்பு அறுவைசிகிச்சை ஆகிய நான்கு முக்கிய துறைகளின் நிபுணர்களை ஒருங்கிணைத்து ஒரே மையத்தில் விரிவான சிகிச்சை சேவையை வழங்குவது ஆகும். இதன் மூலம் வெவ்வேறு கிளினிக்குகளுக்கு செல்ல வேண்டிய அவசியத்தை தவிர்த்து முக அழகு,உடல் கட்டுக்கோப்பு, மார்பக அழகு, தோல் மற்றும் முடி சிகிச்சைகள், மகளிர் அழகு சிகிச்சைகள் என அனைத்து சேவைகளும் பொதுமக்களுக்கு எளிதாக ஒரே இடத்தில் கிடைக்கும் வசதியை உருவாக்கியிருக்கிறது.

எஸ்.ஆர்.எம். குழுமத்தின் நிறுவனர்- வேந்தர் திரு. டி.ஆர். பாரிவேந்தர் அவர்கள் கூறுகையில்,
“அழகியல் மருத்துவம் இன்று தனித்தனி ஒப்பனை மாற்றங்களை மட்டுமே நாடும் நிலையைத் தாண்டி ஒரு முழுமையான அணுகுமுறையை நோக்கிப் பரிணமித்து வருகிறது.இதில் ஒருவரின் தோற்றம்,உடல் விகிதாச்சாரம், செயல்பாடு மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வு ஆகியவை ஒன்றிணைந்து கவனத்தில் கொள்ளப்படுகின்றன.

முகம்,சருமம், கூந்தல்,பற்கள் உடல் அமைப்பு, மார்பகம் மற்றும் அந்தரங்கப் பகுதிகள் என அனைத்து அம்சங்களுக்கும் தீர்வுகாண நோயாளிகள் பெருமளவில் விரும்புகின்றனர். இந்நிலையில், ஒவ்வொரு குறைபாட்டிற்கும் தனித்தனியாகச் சிகிச்சை அளிப்பதைத் தவிர்த்து, தனிநபரை மையமாகக் கொண்டு பல்வேறு மருத்துவத் துறைகளை ஒன்றிணைப்பதில்தான் அழகியல் சிகிச்சையின் எதிர்காலம் அடங்கியுள்ளது. SAI இந்த உயரிய தத்துவத்தின் அடிப்படையில்தான் உருவாக்கப்பட்டுள்ளது.

அழகு என்பதற்கு அனைவருக்கும் பொதுவான ஒரு வரையறையை உருவாக்குவது எங்களின் நோக்கமல்ல. மாறாக, நோயாளிகள் தங்களின் தனிப்பட்ட அழகியல் கனவுகளை நனவாக்கத் தேவையான மருத்துவ நிபுணத்துவத்தையும்,சிறந்த தேர்வுகளையும் அவர்களுக்கு வழங்குவதே எங்கள் இலக்காகும். அதேவேளையில், அவர்களின் இயற்கையான உடல் விகிதாச்சாரம், உடலியல் செயல்பாடு மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாகப் பாதுகாப்பினை உறுதிசெய்வதிலும் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்”என்றார்.

உடல் ஆரோக்கியம் மட்டுமல்ல அழகும் முக்கியம் என்பதை எடுத்துக்காட்டும் வகையில் அழகு சிகிச்சை வழங்க தயாராகும் சிம்ஸ் மருத்துவமனையைநாம் பாராட்டி வரவேற்கலாம்.

-பவித்ரன். ஹெல்த் அண்ட் பியூட்டி.