யது 24.நான்கு மாதத்தில் திருமணம் நடைபெற உள்ளது.எனது மார்பகம் ஒன்று சிறியதாகவும், மற்றொன்று பெரியதாகவும் உள்ளது.எனக்கு அச்சமாக இருக்கிறது… கணவர் என்ன சொல்வார்… இதனால் பிரச்னை வருமா?
-பெயர் வெளியிட விரும்பாத மதுரை வாசகி.

பொதுவாக மனிதர்களுடைய உடலின் இரு பக்கங்களும் ஒன்று போல இருக்காது. பார்ப்பதற்கு பெரிய அளவில் வித்தியாசம் தெரியாது என்றாலும் பலருடைய உடலிலும் இந்த வித்தியாசம் இருக்கும்‌.உற்றுப் பார்த்தால் மட்டுமே இது தெரியும்.
வெளிப்புற உறுப்புகள் மட்டுமல்ல,உடலின் உள்ளுறுப்புகளும் ஒரு பக்கத்தில் இருப்பது போல் மறு பக்கத்தில் இருக்காது. ஆண்களின் விதைப்பைகள் கூட ஒரு பக்கம் ஏறியும் மறுபக்கம் இறங்கியும் தான் இருக்கும்.இயற்கை மனித உடல் அமைப்பை இப்படித்தான் படைத்திருக்கிறது.

மார்பகங்கள் இரண்டுமே ஒன்று போலவே இருப்பதும்,ஒரே அளவில் இருக்க வேண்டிய அவசியமில்லை.
அளவும் வடிவும் மாறி மாறித்தான் இருக்கும்.இதற்காக வருத்தப்பட வேண்டாம்.

தாராளமாக திருமணம் செய்து கொள்ளலாம்.எந்த பிரச்னையும் வராது.மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துகிறேன்.