
டாக்டர்.டி.காமராஜ்
.எம்.டி. பாலியல் நிபுணர்
கணவன் – மனைவி உறவுக்குள்ள என்ன ‘டீலா… நோ டீலா’னு பேசிக்கிட்டு… அதெப்படி சாத்தியப்படும்?” கணவன்-மனைவி உறவுக்கு மட்டுமல்ல… எல்லா உறவுகளுக்கும் நட்புகளுக்கும் இப்படியொரு டீல் அவசியம்தான்.
‘நான் என் துணையை மனதாரக் காதலிக்கிறேன். என் துணையின் மீது உயிரையே வைத்திருக்கிறேன். துணைக்காக எதையும் செய்யத் தயாராக இருக்கிறேன். பிறகெதற்கு டீல்?’ எனக் கேட்கலாம். ‘உயிரையே வைத்திருக்கிறேன். எதையும் செய்யத் தயாராக இருக்கிறேன்’ என்கிற எண்ணங்களே காலப்போக்கில் ஒருவித தியாக மனப்பான்மையாக மாறி, ஒருவித உறுத்தலைத் தரும்.
உலகளவில் கோடிக்கணக்கான பெண்கள் கணவர்களைச் சார்ந்தே வாழ்கிறார்கள். அவர்களுக்குள் ஒருவித கோபமும் பாதிக்கப்பட்ட உணர்வும் நிச்சயம் இருக்கும். அதுவே கணவன் மனைவிக்குள் இருவரும் இணை என்கிற டீல் பின்பற்றப்பட்டால் இப்படியொரு குற்ற உணர்வோ, கோபமோ வர வாய்ப்பில்லை.
அன்பை மட்டுமே ஆயுதமாகப் பயன்படுத்தி துணையைத் தனக்கு அடிமைப்படுத்தலாம் என நினைத்தால் அது நியாயமான தல்ல. அங்கே அன்பின் உண்மையான அர்த்தம் மாறிப் போகும். தேனிலவுக் கால மயக்கத்தில் இருக்கும் வரை இந்த விஷயம் உறுத்த லைத் தராது. காலப்போக்கில் இருவருக்குள்ளும் காதலே இல்லை அல்லது குறைவாக இருக்கிறது என்பது வெளிப்படையாகவே வார்த்தைகளிலும் செயல்களிலும் தெரிய வரும்.
இதைத்தாண்டி, கணவருக்கு அடங்கி இருப்பதும் அவருக்கு அன்பு செய்வதுமே வாழ்நாள் கடமை என நினைத்து, தன்னை தியாகத்தின் உருவமாகக் காட்டிக் கொள்ள நினைக்கிற மனைவிகளும் இருக்கிறார்கள். ஆங்கிலத்தில் Downhill என்பார்கள். அதாவது, இத்தகைய சிந்தனை இருவருக்குமான அன்பை, நெருக்கத்தை கீழ் நோக்கி சரிய வைத்துவிடும். சுருக்கமாகச் சொல்லப் போனால், துணையின் மீது இரக்கமாக இருப்பதில் கவனம் செலுத்துவது மட்டுமே உறவின் நெருக்கம் கூட்டாது. உங்கள் மீதும் அதே அளவு இரக்கம் அவசியம் என்பதுதான் இந்த டீலின் சாராம்சம்.
ஒருசிலர் எப்போதும் தாம் இருக்கும் இடத்தை கலகலப்பாக, மகிழ்ச்சியாக, துள்ளலாக வைத்திருப்பார்கள். அப்படிப்பட்ட நபர்களை சந்திக்கிறபோது, அவர்களின் கல கலப்பும் மகிழ்ச்சியும் நமக்குள்ளும் பற்றிக் கொள்வதை உண ரலாம். அதே போல நெகட்டிவ் சிந்தனை கொண்ட ஒருவரை சந்திக்கிறபோது, அந்த நெகட்டிவ் மனநிலை நம்மையும் எரிச்சலூட்டுவதை உணரலாம். கணவன்-மனைவிக்குள் இந்த எனர்ஜி எக்ஸ்சேஞ்ச் மிக முக்கியமாக நடக்கும். ஏற்கனவே சொன்னது போல திருமணமான புதிதில் இந்தப் பரிமாற்றம் குறைவாக இருக்கும். போகப்போக தெரியும்.
உதாரணத்துக்கு மனத்தளவில் பலவீனமான ஒரு பெண்ணும் மன தைரியம் கொண்ட ஒரு ஆணும் திருமணம் செய்யும் போது, கணவரின் தைரியம் அந்த மனைவிக்கும் வரும். கணவர் பலவீனமானவராக மாறமாட்டார் என்பது என்ன நிச்சயம் என நீங்கள் கேட்கலாம். இருவரில் யார் அவரது குணாதிசயத்தில் ஆதிக்க சிந்தனையுடன் இருக் கிறாரோ, அவரது குணம்தான் இன்னொருவருக்கும் தொற்றும்.
மனைவி இயல்பிலேயே மிக மகிழ்ச்சியான சுபாவம் கொண்ட வராகவும் கணவர் சிடுமூஞ்சியாகவும் இருக்கலாம். மனைவியின் மகிழ்ச்சி நிலை, கணவரின் சிடுசிடுப்பைவிடவும் அதிகமாக இருந் தால் காலப்போக்கில் கணவரையும் கலகலப்பாக மாற்றும். கணவரின் சிடுசிடுப்பு நிலை அதிகம் என்றால் மனைவியின் மகிழ்ச்சியும் காணாமல் போகலாம். உங்கள் துணை எந்த அளவுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறாரோ அந்த அளவுக்குத்தான் உங்களாலும் மகிழ்ச்சியாக இருக்க முடியும் என்பது பொதுவிதி. துணையின் மனநிலையை மாற்ற வேண்டும் என்பதை இன்னொருவர் விரும்பிச் செய்வதில்லை. ஆனாலும், அது இருவருக்குள்ளும் இயல்பாக நிகழ்ந்துவிடும்.
இந்த எனர்ஜி எக்ஸ்சேஞ்ச் வெறும் சுக, துக்கங்களுடன் நின்று போகிற விஷயமல்ல… இருவரின் வளர்ச்சியையும் பாதிக்கிற அளவுக்குத் தீவிரமானது. உதாரணத்துக்கு இருவரில் ஒருவர் ஏதோ ஒரு சாதனை நிகழ்த்தியிருப்பார் துணைக்கு அது குறித்து எந்த மகிழ்ச்சியும் இல்லை என்றால் சாதித்தவராலும் அதன் சந்தோஷத்தை அனுபவிக்க முடியாது. ஆதர்ச தம்பதி என்றால் இருவரில் ஒருவர் சறுக்கிச் சாய்கிற போது, விழுந்து விடாதபடி தாங்கிப் பிடிக்கிறவராக இருக்க வேண்டும். அதில் அன்பும் அக்கறையும் இருக்க வேண்டும்.
இருவரில் ஒருவர் அதீத காதலுடனும் அன்புடனும் மன்னிக்கும் மனப்பான்மையுடனும் இருந்தால். இன்னொருவரும் மெல்ல மெல்ல அந்த மனநிலைக்கு மாறுவார்.
மாறாக ஒருவர் சுயநலமாக, எப்போதும் தன் உரிமைகளைப் பற்றியே சிந்திப்பவராக, பேசுகிறவராக இருந்தால் இன்னொருவருக்கும் அப்படியே இருக்கத் தோன்றும். எனர்ஜி எக்ஸ்சேஞ்ச் என்பது வெறும் வார்த்தைகளோடு நின்றுவிடாமல் செயல்களிலும் தொடர வேண்டும். தம்பதியரில் ஒருவர் எப்போதும் மகா புத்திசாலித்தனமாக பேசக் கூடியவராக இருப்பார். ஆனால், செய்கையில் அதற்கு நேரெதிராக நடந்துகொள்வார். பேச்சுக்கும் செயலுக் கும் சம்பந்தமே இருக்காது. இதைத்தான் ஆங்கிலத்தில் Lip service என்கிறோம். எனவே, வெறும் வாய்ச்சொல் வீரர் களைப் பார்த்து பொருத்தமான தம்பதி என எடை போட்டுவிட முடியாது.
காதல் வளர்க்க 5 அறிவுரைகள்!
• வாரத்தில் ஒரு நாள் உங்கள் துணையுடன் நன்றாக டிரெஸ் செய்துகொண்டு, இருவருக்கும் பிடித்த ஏதேனும் ஒரு ரெஸ்டாரன்ட், ரிசார்ட், பூங்கா போன்ற இடங்களுக்குச் சென்று நேரம் செலவிடுங்கள். இருவருக்கும் பிடித்த அந்த இடம் கடற் கரையாகவோ, உங்கள் வீட்டு மொட்டை மாடியாகவோகூட இருக்கலாம்.
• வாய்ப்பு கிடைக்கிற போதெல்லாம் உங்கள் துணையைத் தொட்டுப் பேசுங்கள்… முத்தமிடுங்கள்… கட்டி அணையுங்கள். சினிமாவில் பார்த்து ரசிக்கிற அந்தக் காட்சிகளை நிஜத்தில் செய்தாலும் ரசனையாகவே இருக்ககும் என்பதை மறந்துவிடாதீர்கள்.
• பெரிய விஷயங்களுக்கு மட்டுமின்றி, சின்னச்சின்ன விஷயங்களுக் குக்கூட ஒருவரை ஒருவர் பாராட்டிக்கொள்ளுங்கள். பாராட்டுக்கு மயங்காத மனிதர்கள் அரிது.
• எப்போது ஷாப்பிங் போனாலும் உங்கள் துணைக்குப் பிடித்த
ஏதோ ஒன்றை வாங்கி வந்து சர்ப்ரைஸ் கொடுப்பதை வழக்க
மாக்கிக்கொள்ளுங்கள். அது காஸ்ட்லியானதாகத்தான் இருக்க வேண்டும் என்றில்லை. காதலைச் சொல்வதாக இருந்தால் போதும்.
• உங்கள் துணை ஏதோ காரணத்துக்காக அப்செட்டாக இருக்கிறாரா? அவருக்கு வேலை அதிகமா? அது போன்ற தருணங்களில் துணையுடன கை கோர்த்தபடி ஒரு வாக் செல்லுங்கள். வெளியில் போய்ச் சாப்பிடுங்கள்.
சினிமா பாருங்கள்…

