ப்போலோ ஹாஸ்பிடல்ஸ், ஞாயிற்றுக்கிழமைகள் உட்பட வாரத்தின் ஏழு நாட்களும் வழக்கமான மற்றும் திட்டமிடப்பட்ட மருத்துவச் சேவைகளை வழங்கும் முதலாவது சிறப்பு முயற்சியான ‘எப்போதும் திறந்திருக்கும். எப்போதும் உங்களுக்காக (Always Open.Always Here) எனும் திட்டத்தை தொடங்குவது குறித்த அறிவிப்பை (18.08.2026) வெளியிட்டுள்ளது.

அப்போலோ மருத்துவமனையின் அவசர சிகிச்சை,
தீவிரச் சிகிச்சை, உள்நோயாளிச் சேவைகள் ஆகியவை எப்போதும் 24×7 அடிப்படையில் கிடைக்கக்கூடியவை‌.இந்த புதிய முன்முயற்சி, வெளிநோயாளி ஆலோசனைகள், பரிசோதனைகள், நோய்த்தடுப்பு மருத்துவப் பரிசோதனைகள், தொடர் ஆலோசனைகள், திட்டமிடப்பட்ட சிகிச்சைகள் ஆகியவற்றை ஞாயிற்றுக்கிழமைகளிலும் விரிவுபடுத்துகிறது. இதன் மூலம் நோயாளிகளும் அவர்களுடைய குடும்பத்தினரும் வார நாட்களுக்காகக் காத்திருக்காமல் சரியான நேரத்தில் சிகிச்சையைப் பெற முடியும்.

அப்போலோ ஹாஸ்பிடல்ஸ் குழுமத்தின் நிறுவனரும் தலைவருமான டாக்டர் பிரதாப் சி. ரெட்டி அவர்கள் இவ்வாறு கூறினார், “நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக,மருத்துவச் சேவை என்பது நோயைக் குணப்படுத்துவது மட்டுமல்ல, ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதும் நோயைத் தடுப்பதும் ஆகும் என்று அப்போலோ நம்புகிறது. ‘எப்போதும் திறந்திருக்கும், எப்போதும் உங்களுக்காக’ என்பது அந்த வாக்குறுதியின் தொடர்ச்சியாகும். அவசரநிலை மற்றும் தீவிர சிகிச்சைகளுக்கு நாங்கள் எப்போதும் துணை நின்றிருக்கிறோம். இப்போது அதே அர்ப்பணிப்பை வாரத்தின் ஏழு நாட்களும் வழக்கமான மற்றும் நோய்த் தடுப்புச் பராமரிப்புச் சேவைகளுக்கும் விரிவுபடுத்துகிறோம்.இது ஒவ்வொரு இந்தியருக்குமான எங்கள் சேவையின் அடையாளம் ஆகும்.

அவர் மேலும் கூறியதாவது, ‘இந்த முன்முயற்சி அப்போலோவில் உள்ள ஒவ்வொரு மருத்துவர்,நர்சு, தொழில்நுட்ப வல்லுநர், மருத்துவப் பணியாளர் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு செலுத்தும் ஒரு மரியாதை ஆகும். மருத்துவச் சேவை என்பது தன்னலமற்ற சேவையின் அடிப்படையில் கட்டியெழுப்பப்பட்ட ஒரு தொழில் அவர்களின் அர்ப்பணிப்பே இந்தியா முழுவதிலும் உள்ள நோயாளிகள் மற்றும் குடும்பங்களுக்காக இந்த அடியை முன்னோக்கி வைக்க எங்களை அனுமதிக்கிறது. ஒரு சரியான நேர ஆலோசனை நோயை ஆரம்பத்திலேயே கண்டறிய அல்லது ஆபத்தைத் தடுக்க உதவுமானால், நாம் காப்பாற்றியிருப்போம். ஆபத்து வருவதற்கு முன்பே பராமரிப்பைத் தேர்ந்தெடுக்க இலட்சக்கணக்கான மக்களை நாம் ஊக்குவித்தால், நாம் எதிர்காலத்தையே மாற்றியமைத்திருப்போம்” என்று கூறினார்.
இந்த முயற்சிக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று நம்பலாம்.

-ஷைலஜா. ஹெல்த் அண்ட் பியூட்டி.