
-டாக்டர். வெங்கட்ரமணன் சாமிநாதன்.,எம்.எஸ்.ஆர்த்தோ.
முதுகுவலிக்கு எத்தனையோ காரணங்கள். பல காரணங்கள் சீக்கிரத்தில் காணாமல் போய்விடும். சில காரணங்கள் மடியிலிருந்து இறங்க மறுக்கும் குழந்தைபோல் நம்மை விட்டு விலகுவதற்கு அடம் பிடிக்கும். அந்த மாதிரி காரணங்களில் மிகவும் முக்கியமானவை முதுகெலும்புச் சவ்வு விலகுவதும் (Disc prolapse) முதுகெலும்பு மூட்டுகளில் வீக்கம் ஏற்படுவதும்.
முதுகெலும்பை ஒட்டி தண்டுவடம் செல்லும் துவாரம் சிறுத்துவிடுகிறது. இதனால் அங்குள்ள நரம்பு அழுத்தப்படுகிறது. அதைச் சுற்றியுள்ள ரத்தக்குழாய்கள் நெரிக்கப்பட்டு, ரத்த ஓட்டம் குறைந்து, நரம்பு இயங்க வழி இல்லாமல் வலி ஏற்படுகிறது. பொதுவாக, காலுக்கு வரும் சியாட்டிக் நரம்பு இவ்வாறு பாதிக்கப்படுகிறது. இதனால்தான் முதுகிலிருந்து காலுக்குப் பரவும் வலியை ‘சியாட்டிகா’ (Sciatica) என்கிறார்கள் மருத்துவர்கள்.

ஆரம்பத்தில் இந்த வலி அவ்வப்போது கீழ்முதுகில் மட்டும் ஏற்படும். பெரும்பாலானோர் இதை ‘வாய்வு வலி’ எனத் தீர்மானித்து சிகிச்சை எடுத்துக்கொள்ளாமல் இருப்பார்கள். திடீரென்று வலி கடுமையாகிப் பின்புறத் தொடைக்கோ காலுக்கோ மின்சாரம் பாய்வதைப்போல் ‘சுரீர்’ என்று பாயும். படுத்து உறங்கும்போது வலி குறைந்து, நடக்கும்போது அதிகமாகும். நாளாக ஆக காலில் மரத்துப்போன உணர்வு ஏற்படும் இதை காலத்தோடு கவனிக்காவிட்டால் மிகுந்த சிக்கலுக்கு உள்ளாகலாம்.
சவ்வு அல்லது டிஸ்க் விலகல், வீங்குதல் எதனால் ஏற்படுகிறது? இதற்கு ஆப்ரேஷன் செய்யலாமா? விளக்கம் தருகிறார் டாக்டர். வெங்கட்ரமணன்ன் சாமிநாதன். எலும்பு சிறப்பு மருத்துவரான இவர் அப்பல்லோ மருத்துவமனையிலும் சவுத் சென்னை ஸ்பெஷலிஸ்ட் கிளினிக்கிலும் சிகிச்சை அளித்து வருகிறார். ஸ்பைனல் மற்றும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சையில் தேர்ச்சி பெற்றவர்.பழகுவதற்கு இனிமையானவர்.இவரது பேச்சே வலியை விரட்டும்.மருந்தே தேவைப்படாது.அவரது பேட்டியிலிருந்து….
டிஸ்க் வீங்குதல்,நழுவுதலுக்கு நமது சாலைகள் தான் காரணமா? டூ வீலர் அளவுக்கு அதிகமாக ஓட்டுவதால் பாதிக்கப்படுகிறோமா?
தண்டுவட எலும்புகள் வட்டமாக ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கி வைத்தது போல் காணப்படும்.உடல் அசைவின் பொழுது ஏற்படும் அழுத்தம் எலும்புகளை பாதிக்காமல் இருக்க எலும்புகளுக்கிடையே சவ்வு எனப்படும் டிஸ்க் போன்ற குஷன்கள் உருவாகி உள்ளன .இந்த டிஸ்க் சிலருக்கு விலகுவதும் வீங்குவதும் உண்டு. அதனால் கை கால்களில் தாங்க முடியாத வலி ஏற்படலாம். காலில் காயம் ஏதும் இல்லாமல் சுரீர் என்று வலி வரலாம்.இடுப்பில் முதுகிலும் வலி வரலாம்.
இது சாதாரணமாக வயது ஏற ஏற பலருக்கும் வரக்கூடியது தான்.சாலைகளின் மேடு பள்ளங்களாலோ,டூ வீலர் அதிக அளவில் ஓட்டுவதாலோ வருவதில்லை.தினமும் லட்சக்கணக்கான மக்கள் டூ வீலர் ஓட்டுகிறார்கள்.எல்லோருக்கும் வருவதில்லையே!
ஒரு சிலருக்கு மட்டும் டிஸ்க் விலகுவது ஏன் டாக்டர்?
பெரும்பாலும் மரபியல் ரீதியாக வருவதுதான். 90%பேருக்கு மிகச் சாதாரணமாக சரியாகிவிடும்.சின்னச்சின்ன மருத்துவ உதவிகள் தேவைப்படும்.10%சதம் பேருக்கு மட்டுமே அறுவை சிகிச்சை தேவைப்படலாம்.
சிகிச்சை பற்றி சொல்லுங்கள் டாக்டர்?
ஆரம்பத்தில் 6-8 வாரம் அதிக அசைவுகள் அற்ற படுக்கை ஓய்வு தேவை.வலி நிவாரணம் தருவார்கள்.பிசியோதெரபி சிகிச்சை தேவைப்படும்.சில உடற் பயிற்சிகளை மருத்துவர்கள் சொல்த்தருவார்கள்.உடல் எடையை சீராக வைத்துக் கொள்ள வேண்டும்.
டிஸ்க் விலகலைஎப்படி அடையாளம் காண்பது…?
பெரும்பாலானவர்களுக்கு எந்த அறிகுறியும் இருக்காது.வேறு ஏதாவது உடல் தொந்தரவுகளுக்காக ஸ்கேன் எடுக்கும் போது கண்டுபிடிக்கப்படுகிறது.அறிகுறி இல்லாமல் இருக்கும்.சிகிச்சையே தேவைப்பட்டாமல் போகலாம்.
எப்போது சிகிச்சை தேவைப்படும்?
10%பேருக்கு அறுவை சிகிச்சை தேவைப்படலாம்.
தண்டுவடத்தில் ஆப்ரேஷன் செய்வது ஆபத்து என்ற அச்சம் இருக்கிறதே டாக்டர்.!?
முன்பு இருந்திருக்கலாம்.இப்போது தேவை இல்லை. இன்றைய மருத்துவத்தில் நவீன தொழில்நுட்பங்களுடன் மிகத் துல்லியமாக ஆபரேஷன் செய்யப்படுகிறது. குறிப்பாக ஸ்பைனல் ஆபரேஷன் என்பது அதிசயமோ ஆபத்தானதும் அல்ல. சகஜமாக எங்கும் செய்கிறார்கள்.ரோபாட்தொழில்நுட்பத்தை பல மருத்துவர்கள் கையாளுகிறார்கள். இதனால் சிறு தவறு கூட நடக்க வாய்ப்பில்லை. ஆப்ரேஷன் ஆன மறுநாளே நடக்கலாம்.
டிஸ்க் விலகலுக்கு நேரடியான சிகிச்சை என்ன?
தண்டுவடத்தில் உள்ள டிஸ்க் வீக்கம் அல்லது நழுவல் இருந்தால் பக்குவமாக வெளியே எடுத்து விடலாம்.அல்லது செயற்கையான டிஸ்க் ஒன்றை வைத்து பொருத்திவிடலாம்.இந்த அறுவை சிகிச்சை நடந்த மறுநாளே நடக்கலாம்.
வேலைக்குப் போகலாம்.வழக்கமான இயல்பான வாழ்க்கைக்கு மாறலாம்.கடுமையான வேலைகளை செய்யக்கூடாது.
எல் 4,எல் 5 பாதிப்பு என்றால் என்ன டாக்டர்?
தண்டுவட அமைப்பை 1-12 வரை வரிசைப்படுத்தி உள்ளார்கள்.எல் 4,எல் 5 ,என்பது அதிக அசைவு உள்ள இடம். அந்த இடத்தில் தான் டிஸ்க் வாங்குவது நழுவுவது ஏற்படலாம் தண்டுவடத்தின் மையத்தில் உள்ள நரம்பு மண்டலத்தை அழுத்தலாம் அதனால் கால் வலியோ,கால் மரத்துப் போவது மாதிரியான பிரச்சனைகள் ஏற்படும் போது தான் அவசர அவசியமாக கவனிக்க வேண்டியதாகிறது .நடக்க முடியாது .பக்கவாதம் மாதிரி இருக்கும். முதுகு வலி இருக்கலாம்.
இந்த பிரச்சனை வராமல் தடுக்க முடியாதா?
வயது ஏற ஏற தண்டுவட பிரச்சனை வரலாம் பொதுவாக உடல் எடையை சீராக வைத்துக் கொள்ள வேண்டும்.உடலில் எந்த பாகத்தில் வலி இருந்தாலும் மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது.
தகவல் தொடர்புக்கு:
சென்னை,
98407 91455,
98840 91455
சந்திப்பு: கண்ணன்,சேகர்

