
எனக்கு வயது 28.நல்ல வேலையில் இருக்கிறேன்.திருமணத்திற்கு பெண் பார்க்கிறார்கள்.எனது ஆண் உறுப்பு சிறியதாக இருப்பதாக சந்தேகப்படுகிறேன்.இதனால் தயக்கமாக இருக்கிறது.இதற்கு மருந்து உண்டா?
-பெயர் வெளியிட விரும்பாத நெல்லை வாசகர்.
ஜப்பான் நாட்டு ஆண்களோட உறுப்பின் சராசரி அளவு 4 இன்ச்சிலிருந்து 4.5 இன்ச் வரை இருக்கும். இந்தியாவுல 5 முதல் 5.5 இன்ச் வரைக்கும் ஓகே.டாக்டர் எனக்கு 4.8 இன்ச்தான் இருக்குன்னாலும் நார்மல்தான்.இந்த அளவுக்குள்ளேயே இந்தியாவுல இருக்கிற 90 சதவிகித ஆண்கள் வந்திடுவாங்க.இந்த உண்மை தெரியாமதான் பல ஆண்களும் என் ஆணுறுப்பு சின்னதா இருக்கு டாக்டர். கல்யாணம் பண்ணிக்க பயமா இருக்கு டாக்டர்னு பதற்றப்படுறாங்க.
ஆணுறுப்பைப் பொறுத்தவரைக்கும் Shower penis, Grower penis னு இரண்டு வகைகள் இருக்கு. சிலருக்கு விறைப்புத்தன்மை அடையாத நிலையிலேயே பெருசா இருக்கும். அவங்களுக்கு விறைப்புத்தன்மை வந்தாலும் அளவுல பெரிய வித்தியாசம் தெரியாது.இது Shower penis. சிலருக்கு விறைப்படையாத நிலைமையில் சிறியதா இருக்கும். விறைப்படைஞ்ச பிறகு நார்மல் அளவுக்கு வந்துடும். இது Grower penis. அதாவது, விறைப்படையுறப்போ ரெண்டு பேருக்கும் கிட்டத்தட்ட ஒரே அளவுல வந்திடும். ஆனா, அவனுக்கு விறைப்படையறதுக்கு முன்னாடியே பெருசா இருக்கேன்னு ஓர் ஆணும், விறைப்படைஞ்ச பிறகும் பெருசா வித்தியாசம் தெரியலையேன்’னு இன்னோர் ஆணும் பயந்திட்டிருப்பான். ஆபாசப் படங்களும் ஆணுறுப்பு தொடர்பா நண்பர்களுடனான உரையாடல்களும்தான் மேலே சொன்ன பிரச்னைக்குப் பெரும்பாலும் காரணம்.
அளவு முக்கியம் இல்லை.நிச்சயமாக உங்களுக்கு சரியாகத்தான் இருக்கும் என்று நம்புகிறேன்.தொடர்ந்து உங்களுக்கு குழப்பம் இருந்தால் தயங்காமல் அருகில் உள்ள பாலியல் மருத்துவர் ஆலோசனை பெறுங்கள்

