டைப்பயிற்சி நலம் தருவதாகவும் மன நலம் காப்பதாகவும் இருக்கிறது.

நடப்பது என்றாலே முன்நோக்கி நடப்பது தான்.காலம்காலமாக முன் நோக்கி நடந்து தான் பழக்கம். மருத்துவர்கள் சமீபகாலமாக பின்நோக்கி நடக்கலாம்… இதனால் உடல் உறுதி பெறும் என்று சொல்கிறார்கள்.

சாதாரணமாக முன்னோக்கி நாம் நடக்கும்போது, குதிகாலை முன்வைத்து பின்னர் விரல்களைத் தரையில் வைப்போம்.ஆனால், பின்னோக்கி நடக்கும்போது விரல்களை முதலிலும் குதிகாலை அடுத்தும் தரையில் வைப்போம். பின்னோக்கி நடக்கும்போது தொடையில் உள்ள நான்கு தலைத் தசைகள்,பின் தொடைத் தசைகள், கெண்டைக்கால் தசைகள்,பிட்டத் தசைகள் ஆகியவை செயல்படுவதால் இந்தத் தசைகள் வலுப்பெறுகின்றன. பின்னோக்கி நடப்பது முழங்காலில் ஏற்படும் அழுத்தத்தைக் குறைக்கிறது.

மேலும்,உடலைப் பின்னோக்கித் தள்ள இடுப்புக்குக் கீழே உள்ள தசைகள் அதிகம் செயல்படுகின்றன.இதனால்,கீழ் இடுப்பு வலி குறைகிறது. பின்னோக்கி நடக்கும்போது மேற்சொன்ன தசைகள் கடினமாகச் செயல்படுவதால், முன்னோக்கி நடப்பதைவிட 40% அதிக கலோரிகள் எரிக்கப்படுவதாகவும், உடலின் சமநிலையை அதிகப்படுத்துவதாகவும் ‘அமெரிக்கன் காலேஜ் ஆஃப் ஸ்போர்ட்ஸ் மெடிசின்’ தெரிவித்துள்ளது.

பின்னோக்கி நடக்கும்போது ஓர் எச்சரிக்கை உணர்வு தேவைப்படுவதால்,மூளையின் கவனம், ஒருங்கிணைப்பு உள்ளிட்டவற்றில் செயல்திறன் கூடுகிறது. இம்மாதிரியான நடையில் இதயத்தின் செயல்பாடும் நுரையீரலின் திறனும் அதிகரிக்கின்றன. பின்னோக்கி நடை பயில்வோர் தடுமாறி கீழே விழச் சாத்தியமுண்டு. அதைத் தவிர்க்க, நன்கு பழகிய இடங்களில் அல்லது சூழல்களில் பயிற்சி செய்ய வேண்டும்.

நினைத்த உடன் பின்நோக்கி நடக்க வேண்டாம். பயிற்சியாளர் உடனிருக்க வேண்டும்.அல்லது சுயமாக பயிற்சி பெறலாம்.நடையை மெதுவாக ஆரம்பித்து, கொஞ்சம் கொஞ்சமாகவே வேகத்தைக் கூட்ட வேண்டும்.நடக்கும் தூரத்தையும் கொஞ்சம் கொஞ்சமாகத்தான் கூட்ட வேண்டும். சரியான காலணிகளை அணிந்துகொள்ள வேண்டும்.