
ஆணுறை என்பது மெல்லிய ரப்பரினால் ஆன உறை. இதை பிரான்ஸ் தோல் (French Leather) என்றும் குறிப்பிடுவர். அவ்வுறையின் முனையில் சிறியபகுதி ஒன்று உள்ளது. இப்பகுதியில்தான் உடலுறவின் போது வெளியேற்றப்பட்ட விந்து சேகரிக்கப்படுகிறது. இவ்வாறாக விந்திலுள்ள உயிரணுக்கள் கருப்பைக்கு செல்லாமல் தடை செய்யப்படுகிறது.
ஆணுறை ஒன்றுதான் பால்வினை நோயினின்று ஓரளவு பாதுகாப்பும் அளிக்கிறது. இதைப் பயன்படுத்துவதற்குமுன்,இதில் ஏதாவது சிறு துளைகள் உள்ளனவா என்பதைக் கவனிக்க வேண்டியது முக்கியமான ஒன்றாகும். ஏதேனும் துளைகள் இருப்பின் அதன் வாயிலாக உயிரணுக்கள் கருப்பையின் உட்சென்று
கருத்தரிக்கும் வாய்ப்பு ஏற்படலாம். இம்முறை 90 விழுக்காடு பயன்தரக்கூடியது.
ஆணுறையை முறையாக பயன்படுத்த தெரிந்துகொள்ள வேண்டும்.தவறாக பயன்படுத்தினால் தாம்பத்ய உறவின்போது கிழிந்துபோகவும் வாய்ப்பு உண்டு.அதன் காரணமாக தேவையில்லாத கர்ப்பம்,பால்வினை நோய்கள் பரவுதலும் நடக்கலாம்.ஆணுறையை நிறைய நிறுவனங்கள் பல்வேறு சிறப்புகளோடு தயாரித்து விற்பனை செய்கின்றன.

