
டாக்டர்.டி.காமராஜ்,பாலியல் நிபுணர்
எந்த ஆண் மகனும் என்றென்றைக்கும் இளமையாகத்தான் இருக்க ஆசைப்படுவான்.
ஆண்மைக்கு அழகும் ஆனந்தமும் கம்பீரமும் இளமைதான். அந்த இளமைக்கு ஆப்பு வைப்பது எது தெரியுமா? விரும்பி குடிக்கும் மது தான்.

எப்போதாவது…
தனியாகவோ நண்பர்களுடனோகுறைந்த அளவில் மது அருந்தினால்,அது உடல் உறவுக்கான உற்சாகமான மனநிலையை தரலாம்.அந்த நேரத்தில் மனம் முழுவதும் பரவசம் பரவும்.கூடுதல் உற்சாகம் கிடைக்கும்.மது,அளவுக்கு மீறினால்,தொடர்ந்து குடித்து வந்தால் உடல் உறவுக்கான மனநிலையை பாதிக்கும். தாம்பத்திய உறவின் மீதான ஆசையை, வேட்கையை,ஏக்கத்தை அடியோடு குழி தோண்டி புதைத்து விடும்.அதிகமாக மது அருந்தும் போது உடலில் உள்ள நரம்புகள் பாதிக்கப்படுகின்றன.
போதையின் பாதையில் தொடர்ந்து பயணித்தால் ஆண்மைக் குறைவு ஏற்படும். விரைப்பையில் சுரக்கும் டெஸ்டோ ஸ்டீரான் ஹார்மோன் அளவு குறைந்து விடும்.எதற்கு இந்த வீண் வம்பு.
மகிழ்ச்சியாக இருக்கத்தான் குடிக்கிறார்கள்.வாழ்க்கையில் அளவில்லாத ஆனந்தத்தை தரும் தாம்பத்திய உறவை அழிக்கும் மதுவுக்கு அடிமையாகாமல் இருப்பதே நல்லது.

