-டாக்டர்.கு.கணேசன்

  1. நீண்ட நேரம் நின்றுகொண்டு வேலை செய்வதையும், அடிக்கடி குனிந்து எழுந்து வேலை செய்வதையும் தவிர்க்கவும்.
  2. நாற்காலியில் உட்காரும்போது கால் மீது கால் போட்டு உட்காரக்கூடாது.
  3. முதுகுவலி உள்ளவர்கள் கயிற்றுக் கட்டிலில் படுத்துறங்கக் கூடாது. இவர்கள் தரையிலோ பெஞ்சிலோதான் படுக்க வேண்டும். சரியான மெத்தையில் பக்கவாட்டில், சற்று குப்புறப் படுத்துக்கொள்ளலாம்.
  4. சுமையைத் தூக்கும்போது இடுப்பை வளைத்துத் தூக்காமல், முழங்காலை மடக்கித் தூக்க வேண்டும். சுமையை மார்பில் தாங்கிக்கொள்ள வேண்டும்.
  5. நீளமான துடைப்பத்தைக் கொண்டு நின்றுகொண்டே தரையைச் சுத்தம் செய்யவது நல்லது.
  6. மேற்கத்தியக் கழிப்பறையைப் பயன்படுத்தினால் தொந்தரவு இருக்காது.
  7. உயரமான செருப்புகள் அணிவது ஆகாது.
  8. மோசமான சாலைகளில் இருசக்கர வாகனங்களில் செல்லக் கூடாது. நான்கு சக்கர வாகன ஓட்டுநர்கள் நிமிர்ந்து உட்கார்ந்து ஸ்டீயரிங் அருகில் அமர்ந்து ஓட்ட வேண்டும்.
  9. உடல் எடையைப் பராமரிக்க வேண்டும். 
  10. சிறு வயதிலிருந்தே உடற்பயிற்சி அவசியம்.