ர்ப்பிணிப் பெண்களுக்கு கணவன்மார்கள் அல்வாவும், மல்லிகைப்பூவும் வாங்கிவந்து கொடுப்பார்கள்; சாப்பிடச் சொல்லி பார்த்து ரசிப்பார்கள்.

மற்ற இனிப்புகளை வாங்கிக் கொடுக்காமல், அல்வாவை மட்டும் வாங்கிக் கொடுப்பதற்கு காரணம் இருக்கிறது. 100 கிராம் அல்வாவில் 516 கலோரி சக்தி இருக்கிறது. இதுபோக 12.7 கிராம் புரதச் சத்தும், 29.9 கிராம் கொழுப்புச்சத்தும், 50.6 கிராம் சர்க்கரைச் சத்தும் இருக்கிறது. கலோரிகளும், மற்ற சத்துகளும் நிறைய இருப்பதாலும், பலருக்கும் பிடித்த இனிப்பு அதிகமாக இருப்பதாலும், சுலபமாக ஜீரணம் ஆகிவிடும் என்பதாலும் கர்ப்பிணிப் பெண்கள் உள்பட எல்லோருக்கும் அல்வா பிடிக்கிறது.

ஒரு நாளைக்கு, உடலுக்குத் தேவையான மொத்த கலோரி சக்தியில், மூன்றில் ஒரு பங்கு வெறும் 100 கிராம் அல்வாவிலேயே கிடைத்து விடுகிறது. இதுதான் அல்வாவின் ரகசியம்.