
மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளும் அடையாளமாக சாக்லெட்டுகள் இருக்கின்றன.சாக்லெட்டில் அதிகப்படியான சர்க்கரை சேர்க்கப்படுவதால் நீரிழிவு நோயாளிகள் தவிர்ப்பது நல்லது. குழந்தைகளும் சாக்லெட் தொடர்ந்து சாப்பிட்டால் உடல் பருமனும், பல் சொத்தை பிரச்னையும் ஏற்படும். தொடர்ந்து அதிகமாக உட்கொண்டால் பல் சொத்தை தீவிரமடையும்.
பொதுவாக நாம் சாப்பிடும் சாக்லெட் டுகளில் எந்தவிதமான சத்தும் இருப்பதில்லை.வெறும் சுவைக்காக மட்டுமே நாம் அதை உட்கொள்கிறோம். ஆனால், டார்க் சாக்லெட்டுகளில் மட்டும் அதிகப்படியான ஆன்டி ஆக்ஸிடெண்டுகள் உள்ளன. இது உடலுக்கு மிகவும் நல்லது.

