னக்கு வயது 20.ஒரு கல்லூரியில் படிக்கிறேன்.நான் எடை குறைவாக இருப்பதால் தினமும் 2முட்டைகளை பச்சையாக சாப்பிட்டால் குண்டாக லாம் என்று எங்கள் ஊரில் சொல்கிறார்கள்.முட்டையை பச்சையாக சாப்பிடக்கூடாது என்று எனது அப்பா தடுக்கிறார்.நான் என்ன செய்வது?

-டி.சுரேஷ், வேதாரண்யம்.

உலகில் எத்தனையோ உணவுகள் இருந்தாலும் முட்டைக்கென்று ஒரு தனித்தன்மை இருக்கிறது.இது முழுமையான, மலிவான உணவு.

உங்கள் அப்பா சொல்வதுதான் சரி.முட்டையை வேக வைக்காமல் பச்சையாக சாப்பிடக்கூடாது.

1% முதல் 2% வரை முட்டைகளில் salmonella எனப்படும் கிருமிகள் இயற்கையாகவே இருப்பதற்கு வாய்ப்பிருக்கிறது. அதனால் சமைக்காமல் சாப்பிட்டால் வாந்தி, பேதி, வயிற்றுப்போக்கு ஏற்பட வாய்ப்பிருக்கிறது. எனவே சமைத்துச் சாப்பிடுவது எல்லா வகைகளிலும் சிறப்பு. சிலர் உடற்பயிற்சி செய்கிறேன் என்ற பெயரில் 10-20 முட்டைகளை சமைக்காமல் சாப்பிடுவார்கள். இதுவும் நல்லதல்ல. கெட்டுப்போன முட்டைகளை சாப்பிட வேண்டாம்.

முட்டை ஃப்ரெஷ்ஷாக இருக்கிறதா? எப்படி கண்டுபிடிப்பது?

முட்டை ஃப்ரெஷ்ஷாக இருக்கிறதா இல்லையா என்பதைக் கண்டறிய பலரும் அறிந்த டெஸ்ட் ஒன்று உள்ளது.தண்ணீர் நிரப்பிய பாத்திரத்தில் போட்டால், ஃப்ரெஷ்ஷான முட்டை மூழ்கிவிடும். பழைய முட்டை மிதக்கும்.நாள்கள் ஆக ஆக முட்டையின் ஓட்டில் இருக்கக்கூடிய pores எனப்படும் நுண்துளைகள் பெரிதாகும். அதன்மூலம் காற்று உள்ளேபோய் எடை குறைந்துவிடும்.

ஹெல்த் அண்ட் பியூட்டி (Health and beauty)