
கர்ப்பூரவல்லி (ஓமவல்லி) இலைச் சாற்றைச் சிறிதளவு தாய்ப்பாலில் கலந்து கொடுத்தால், குழந்தைகளுக்கு உண்டாகும் மந்தம், சளித் தொந்தரவுகள் குறையும் என்பது முன்னோர் காட்டிய வழி.இலைச் சாற்றைக் குழந்தைகளின் மார்புப் பகுதியில் தடவிவர இருமல் குணமாகும். மழைக் காலத்தில் குடிக்கும் நீரில் 4, 5 இலைகளைப் போட்டுப் பயன்படுத்தலாம்.
சிறிதளவு இலையை மென்று சாப்பிட்டால் இருமல் குறையும். இதில் உள்ள எளிதில் ஆவியாகக்கூடிய எண்ணெயில் இருக்கும் ‘p-cymene’ மற்றும் ‘thymol நோய்க்கிருமிகளை அழிப்பதாக ஆய்வுக் கட்டுரைகள் கூறுகின்றன. வேது (ஆவி) பிடிக்கப் பயன்படுத்தப்படும் மூலிகைகளுள் கர்ப்பூரவல்லி முக்கியமானது. இதன் இலைகளால் செய்யப்படும் கர்ப்பூரவல்லி பஜ்ஜி ரெசிப்பி, சில ஹோட்டல்களில் ஸ்பெஷல் மெனு!

