டாக்டர் நா. மங்கையர்கரசி,
அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி,சென்னை.

சாஜ் தெரபி என்பது உடல் மற்றும் மனம் சார்ந்த ஆரோக்கியத்தை மேம்படுத்த,உடலில் மென்மையான திசுக்களை,தசை, இணைப்பு திசு,தசை நாண் மற்றும் தசை நாரை கையால் பிசைந்து தேய்த்து சிகிச்சை அளிப்பதாகும்.

மசாஜ் தெரபி, இயற்கை நலத்துக்கான தொன்மையான தொடு சிகிச்சையாகும். இதை இயற்கை மருத்துவம் என்றும் சொல்லலாம்.

மனமும் உடலும் ஒன்றிணைந்து நலமுடன் செயல்பட வேண்டுமானால்.. இயற்கை முறைகளின் பங்களிப்பு அவசியம்.

இந்த சிகிச்சை முறை காயம் இல்லாதது, பக்க விளைவுகள் இல்லாதது, தொன்மையான நல சிகிச்சை என்றும் சொல்லலாம்.

உடல் முழுவதுமாகவோ, தேவையான இடங்களில் மட்டுமே கூட மசாஜ் செய்யலாம்.

மசாஜ் செய்வதற்கு நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், அரோமா எண்ணெய்கள், மூலிகை எண்ணெய்களை தேவைக்கு ஏற்ப பயன்படுத்துகிறார்கள்.

1. மசாஜ் செய்வதற்கு பல்வேறு நுட்பங்கள் உள்ளன.(உதாரணமாக: ஸ்ட்ரோகிங்,வைப்ரேஷன்,டச்,பிரிக்சன், நீடிங், ஜாயின்மூமென்ஸ்)
உடல் நலன், சிகிச்சை முறைக்கு ஏற்ப நுட்பங்களை தேர்வு செய்யலாம்.

2. மசாஜ் தெரபி மூலம் மன அமைதியை பெறலாம். நரம்பு அழுத்தும் குறையும்.

3. மனப்பதட்டம் குறையும். தூக்கமின்மை சரியாகும்.மூளை செயல்பாடு மேம்படும்.

4. ரத்த ஓட்டம் சீராகும். ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் கொண்டு வரலாம்.

5. உடல் பருமன்,இதய நோய்,உயர் ரத்த அழுத்தம்,பக்கவாதம், நீரிழிவு நோய் போன்றவற்றை மசாஜ் தெரபி மூலம் கட்டுப்படுத்தலாம்.

6. நுரையீரல் செயல்பாடுகள் மேம்படும்.மூச்சுத் திணறல் சீராகும்.ஆத்மா பிரச்னைகள் சரியாகும்.

7. ஜீரண சக்தி மேம்படும் மலச்சிக்கல், வாழ்வுத் தொல்லைகள் குறையும்.
8. தசை வலிகள் குறையும்.
9. மாதவிடாய் பிரச்னைகள் சீராகும்.தேவையான ஹார்மோன் உற்பத்தி அதிகரிக்கும்.
10. மன உறுதி அதிகரிக்கும். மகிழ்ச்சியான, நிகழ்ச்சியான மனநிலை ஏற்படும்.
11. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருக்கும் ஏற்றது மசாஜ் தெரபி.
12. அதிக காய்ச்சல், தோல் நோய்கள், புண்கள்,எலும்பு முறிவு,காயங்கள், இதய நோய், ரத்தக் கசிவு,கர்ப்ப காலம்,அலர்ஜி போன்ற சூழ்நிலைகளில் மசாஜ் செய்வதை தவிர்க்க வேண்டும்.
13. சாப்பிட்ட உடனே மசாஜ் செய்வதை தவிர்க்க வேண்டும்.
14. மசாஜ் தெரபிக்கு சரியான எண்ணெயை தேர்வு செய்வது முக்கியம்.

15. பெண்களின் தொந்தரவுகளுக்கு ஏற்ப மசாஜ் தெரபியை தேர்வு செய்து பயன்பெறலாம்.
16. தைராய்டு பாதிப்பு உள்ளவர்கள், அதற்கான சிறப்பு தைராய்டு மசாஜ் செய்து கொள்ளலாம்.